
சின்னத்திரை மற்றும் வெள்ளி திரையில் பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் தான் ரேகா நாயர். இவர் அவ்வப்போது சமூகத்தில் நடக்கும் சிலர் பிரச்சனைகளுக்கு துணிச்சலாக தனது கருத்தை வெளிப்படுத்தி மக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்து வருகிறார். இப்படி இருக்கையில் சினிமாவில் இருக்கும் அட்ஜஸ்மென்ட் குறித்து இவர் பேசியது தற்போது வைரலாகி வருகிறது. அதாவது சினிமாவில் மட்டும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சினை கிடையாது, எல்லா துறைகளிலும் அட்ஜஸ்மென்ட் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் சினிமாவில் இருக்கும் அட்ஜஸ்ட்மென்ட்கள் பற்றி பலர் துணிச்சலாக பேசி வருகின்றனர்.

அதாவது அட்ஜஸ்ட்மெண்ட் செய்தால் சொகுசு கார், ஐ போன், ஈஸியார்ல வீடு என வசதியான வாழ்க்கை வாழலாம் என பலர் நினைக்கிறார்கள். பட வாய்ப்பு தருகிறேன் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வேண்டும் என யாராவது என்னை கூப்பிட்டால் அவரைப் பிடித்திருந்தால் போவேன், இல்லையென்றால் போக மாட்டேன். மேலும் அட்ஜஸ்ட்மென்ட் செய்தால் எத்தனை கோடி தருவ? என்று துணிச்சலாக கேட்பேன். அதைக் கேட்ட உடனே அவன் பயந்து ஓடி விடுவான். இப்படி நாம் தைரியமாக இருக்கும் போது எவரும் நம்மை எதுவும் செய்துவிட முடியாது எனக் கூறியுள்ளார்.