பொதுவாக இந்தியாவை பொறுத்தவரையில், மக்கள் செல்ல பிராணிகளை வளர்ப்பதில் அதிக ஆர்வம் கொண்டவர்களாக திகழ்கின்றனர். சொந்த வீட்டில் செல்லப் பிராணிகளை வளர்ப்பதில் பெரிதளவில் எவ்வித பிரச்சனையும் சந்திக்க வேண்டிய அவசியம் இருக்காது. ஆனால், குடியிருப்பு (அபார்ட்மெண்ட்) பகுதிகள், வாடகை வீட்டில் வசிப்பவர்களுக்கு, செல்ல பிராணிகளை வளர்க்க பல வித கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது.
இந்த வகையில், பெங்களுரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் செல்லப் பிராணி வைத்திருப்பவர்களிடம் ரூ. 10 ஆயிரம் வசூலிக்கப்படும் என்று குடியிருப்போர் நல சங்கம் அறிவித்துள்ளது. மேலும், செல்ல பிராணிகள் அங்கு வாசிப்பவர்களை கடித்து விட்டால், அவர்களின் மருத்துவ செலவிற்காக தான் இத்தொகை வசூலிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளது. இதில் குறிப்பாக, வரும் நவம்பர் 15 ஆம் தேதிக்குள் இத்தொகையை செலுத்த தவறினால் ரூ. 100 அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அறிந்த அந்த குடியிருப்பு வாசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.