இரண்டாவது திருமணம் சர்ச்சை விவகாரம்..,  உண்மையை உடைத்த நடிகை மீனா.. முழு விவரம் உள்ளே!!

0
இரண்டாவது திருமணம் சர்ச்சை விவகாரம்..,  உண்மையை உடைத்த நடிகை மீனா.. முழு விவரம் உள்ளே!!
தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை மீனா. தற்போது இவர் சின்னத்திரை நடன நிகழ்ச்சியில் நடுவராகவும்,  குணச்சித்திர கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார். இது ஒரு புறம் இருந்தாலும்,  கடந்த 2022ம் ஆண்டு யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு ஓர் சோகம் அவருக்கு அரங்கேறியது. அதாவது அவரின் கணவர் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இந்த நிலையில் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் இரண்டாவது திருமணம் குறித்து பேசியுள்ளார்.
அதில், சமூக வலைத்தளத்தில் உண்மைகளை சொல்லுங்கள், அதுதான் நல்லது. நாட்டில் என்னைப்போல் தனிமையில் வாழும் பெண்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்களின் பெற்றோர் மற்றும் குழந்தைகள் பற்றி யோசியுங்கள். தற்போதைக்கு எனக்கு இரண்டாவது திருமணம் பற்றி எந்த சிந்தனையும் இல்லை. எதிர்கால முடிவு பற்றி இப்போது எப்படி சொல்ல முடியும். எனவே இரண்டாவது திருமணம் என்று வெளியாகும் வதந்திகளை யாரும் கண்டு கொள்ள வேண்டாம் என்று கூறி தனது கருத்தை முடித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here