‘Body Shaming’ குறித்து பேசியவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்த நடிகை மஞ்சிமா மோகன் – ட்ரெண்டிங்காகும் வீடியோ!!

0

தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை மஞ்சிமா மோகன் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகை மஞ்சிமா மோகன்:

மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக தனது திரையுலக வாழ்க்கையை ஆரம்பித்தவர் நடிகை மஞ்சிமா மோகன். அதன் பின்னர் தமிழில் இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளிவந்த ‘அச்சம் என்பது மடமையடா’ என்ற படத்தில் நடிகர் சிம்புக்கு ஜோடியாக நடித்து இருப்பார். தற்போது நடிகர் விஷ்ணு விஷாலின் எஃப் ஐ ஆர் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த நிலையில் இந்த படம் குறித்த ஒரு நிகழ்ச்சியில் இவர் கலந்து கொண்ட போது ரசிகர்கள் அவரிடம், body shaming குறித்து கேட்டுள்ளனர். அதற்கு தக்க பதிலடி கொடுக்குமாறு அவர் கூறியதாவது, நடிகைகள் ஒருபோதும் ஒல்லியாக தான் இருக்க வேண்டும் என அவசியம் இல்லை, உடலை ஆரோக்கியமாக வைத்து இருந்தால் மட்டும் போதும்.

ஒல்லியாக இருந்தால் மட்டும் சும்மாவா விடுவீங்க, உங்களுக்கு என்ன நோய் இருக்குமோ என்று தானே கேக்குறீங்க. எப்படி இருந்தாலும் body shaming இருக்க தான் செய்யும். மேலும் இவர், நடிகை சாய்பல்லவியை எடுத்துக்காட்டாக கூறியுள்ளார். அவரை பாருங்கள் அவர் எவ்வளவு நம்பிக்கையாக தன்னை காட்டி மற்றவர்களுக்கு இன்ஸ்பிரேஷன் ஆக உள்ளார் என்றும் கூறியுள்ளார். அதை கேட்ட ரசிகர்கள் வாய் அடைத்து போய் விட்டனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here