தொடரும் ரவீந்தர்-மஹாலக்ஷ்மி திருமண சர்ச்சை.., முற்றுப்புள்ளி வைத்த தம்பதிகள்!!

0

பிரபல திரைப்பட தயாரிப்பாளரை மகாலட்சுமி திருமணம் செய்து கொண்டதால் பல்வேறு எதிர்மறை விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது.

சீரியல் நடிகை

சீரியல் நடிகை மகாலட்சுமி கடந்த சில வாரங்களுக்கு முன்பு தான் பிரபல தமிழ் திரைப்பட தயாரிப்பாளரான ரவீந்தர் சந்திரசேகரனை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். இவ்வளவு குண்டா இருக்கும் ஒருவரை எப்படி இவர் திருமணம் செய்துகொண்டார் எனவும், காசுக்காக தான் கண்டிப்பாக திருமணத்திற்கு ஒப்புக் கொண்டிருப்பார் எனவும் பல்வேறு வதந்திகள் தற்போது வரைக்கும் பரவியபடியேதான் இருந்து வருகிறது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஆனால், இருவருமே எந்த ஒரு தவறான பதிவையும் காதில் வாங்கிக்கொள்ளாமல் மகிழ்ச்சியாக தனது திருமண வாழ்க்கையை கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர். மேலும், இருவரும் ஹனிமூனுக்கு அங்கு செல்ல இருக்கிறார்கள், இங்கு செல்ல போகிறார்கள், இத்தனை லட்ச மதிப்புள்ள பரிசுப்பொருட்களை மகாலட்சுமிக்கு ரவீந்தர் வாங்கி கொடுத்து இருக்கிறார் எனவும் பல்வேறு செய்திகள் பரவியிருக்கிறது.

இந்நிலையில் ரவீந்தர் மற்றும் சீரியல் நடிகை மகாலட்சுமி இருவரும் தற்போது இந்த வதந்திகளுக்கெல்லாம் ஒரு பதிலை தெரிவித்துள்ளனர். அதாவது, எங்களின் திருமணத்தை பற்றி எதுவாக இருந்தாலும் பேசிக் கொள்ளுங்கள். நாங்கள் எங்களது காதில் வாங்கிக் கொள்ள போவதில்லை. மேலும், நாங்கள் தற்போது தான் எங்களது திருமண வாழ்க்கையை நிம்மதியாக கொண்டாடிக் கொண்டிருக்கிறோம் என ஒரு பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here