‘காதலுக்கான மொழி இது தான்’….,நடிகை கஜோல் ஓபன் டாக்….,

0
'காதலுக்கான மொழி இது தான்'....,நடிகை கஜோல் ஓபன் டாக்....,
'காதலுக்கான மொழி இது தான்'....,நடிகை கஜோல் ஓபன் டாக்....,

இயக்குனர்கள் அமித் ரவீந்தர்நாத் சர்மா, ஆர். பால்கி, கொன்கோனா சென் சர்மா மற்றும் சுஜோய் கோஷ் ஆகியோர் இயக்கியுள்ள ஆந்தாலஜி திரைப்படம் ‘லஸ்ட் ஸ்டோரீஸ் 2’. உறவுகள் மற்றும் காதலை கருவாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தில் நடிகைகள் கஜோல், தமன்னா, விஜய் வர்மா, அம்ருதா சுபாஷ், ம்ருணால் தாக்கூர் மற்றும் நீனா குப்தா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஜூன் 29 ஆம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கும் இந்த திரைப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் இணையதளத்தில் வெளியானது. இந்த படம் பெயருக்கு ஏற்றபடி காதல் மற்றும் படுக்கை அறை சம்பந்தப்பட்ட காட்சிகளால் நிறைந்து இருந்தது. குறிப்பாக, நடிகை தமன்னா இந்த படத்தில் அளவுக்கு மீறி கவர்ச்சி காட்டி இருப்பதாகவும் விமர்சனங்கள் எழுந்தது.

கமலுடன் இணையும் சிம்பு? இயக்குவது மணிரத்னம்….,அப்போ பெரிய சம்பவம் இருக்கு போலயே….,

இந்த நிலையில், இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாக இருக்கும் ‘லஸ்ட் ஸ்டோரீஸ் 2’ திரைப்படத்தின் மீதான தனது கருத்தை கூறி இருக்கிறார் நடிகை கஜோல். அதாவது, ‘காதலுக்கான மொழி இன்று மாறி விட்டது. இதை தான் சினிமாவும் பிரதிபலிக்கிறது. 1990களில் காதல் என்று நினைத்தது இன்று பின்தொடர்தலாக மாறி இருக்கிறது. இனியும் இந்த பழைய சினிமா காதல் கதை எல்லாம் எடுபடாது. எல்லாரும் நீங்கள் எடுப்பதை விட நல்ல சினிமாவை எதிர்பார்க்கிறார்கள்’ என்று இன்றைய யதார்த்ததை கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here