‘வா வா என் தேவதையே’…,குழந்தையாக மாறிய இயக்குனர் செல்வராகவன்….,வைரலாகும் வீடியோ…,

0
'வா வா என் தேவதையே'...,குழந்தையாக மாறிய இயக்குனர் செல்வராகவன்....,வைரலாகும் வீடியோ...,
'வா வா என் தேவதையே'...,குழந்தையாக மாறிய இயக்குனர் செல்வராகவன்....,வைரலாகும் வீடியோ...,

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான செல்வராகவன் ‘துள்ளுவதோ இளமை’ திரைப்படம் மூலம் அறிமுகமானார். தனது கதைகளில் வித்தியாசமான காதல் ஸ்வாரசியங்களை சொல்லிய இவருக்கு ரசிகர்கள் நல்ல வரவேற்புகளை கொடுத்தனர். செல்வராகவன் படம் என்றால் இப்படித்தான் இருக்கும் என்று சொல்லக்கூடிய அளவுக்கு தனக்கென தனி பாணியை உருவாக்கி வைத்துள்ளார் அவர்.

இதுவரை இயக்குனராக மக்களை மகிழ்வித்த செல்வராகவன் பீஸ்ட், சாணி காகிதம் போன்ற திரைப்படங்கள் மூலம் சிறந்த நடிகராகவும் தன்னை நிருபித்துள்ளார். அப்படி படங்களில் நடித்த பிறகு தான் செல்வராகவனை பொது இடங்களிலும், சமூக ஊடகங்களிலும் பார்க்க முடிகிறது.

‘காதலுக்கான மொழி இது தான்’….,நடிகை கஜோல் ஓபன் டாக்….,

இப்போது சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது வாழ்க்கைக்குத் தேவையான முக்கிய கருத்துக்களை கூறி வந்தார். இந்த கருத்துக்களுக்கு ரசிகர்களிடம் குறிப்பாக இளைய தலைமுறையினரிடம் இருந்து வரவேற்புகள் கிடைத்தது. இந்நிலையில், செல்வராகவன் தனது குழந்தையுடன் குட்டி பைக்கில் அமர்ந்து கொண்டு ரைடு செய்யும் காட்சிகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த கியூட்டான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here