என்னது., அனுபமாக்கு நிச்சயதார்த்தம் முடிஞ்சுருச்சா? அவரே வெளியிட்ட புகைப்படம்., இணையத்தில் வைரல்!!

0
என்னது., அனுபமாக்கு நிச்சயதார்த்தம் முடிஞ்சுருச்சா? அவரே வெளியிட்ட புகைப்படம்., இணையத்தில் வைரல்!!
என்னது., அனுபமாக்கு நிச்சயதார்த்தம் முடிஞ்சுருச்சா? அவரே வெளியிட்ட புகைப்படம்., இணையத்தில் வைரல்!!

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகை அனுபமா பரமேஸ்வரன். மலையாளத்தில் வெளியான ‘பிரேமம்’ என்ற திரைப்படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிந்தார். இதை தொடர்ந்து ‘கொடி’ என்ற படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்து தமிழ் திரைக்கு என்ட்ரி கொடுத்தார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இப்படி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார். மேலும் தற்போது இவர் 3 படங்களுக்கு மேல் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார். என்னதான் இவர் தனது கெரியரில் பிஸியாக இருந்து வந்தாலும் அவ்வப்போது சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார். இந்நிலையில் இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் தனக்கு நிச்சயதார்த்தம் ஆகிவிட்டதாக பதிவிட்டுள்ளார்.

வானிலை மாற்றத்தால் ஏற்பட இருக்கும் விளைவுகள்.., வெளியான அதிர்ச்சி தகவல்!!

மேலும் அவரது விரல்களில் பிளாஸ்டிக் கவரை மோதிரமாக அணிந்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார். இதற்கு முன் இவர் கிரிக்கெட் வீரர் பும்ராவை காதலிப்பதாக கூறியதும், அதன் பின் சில நாட்களிலேயே பும்ரா, சஞ்சனாவை திருமணம் செய்து கொண்டதும் அந்த சர்ச்சை முடிவுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது. இதனால் தற்போது இவர் கூறியிருப்பதை பார்த்த ரசிகர்கள் ”உங்களுக்கு இதே வேலையா போயிருச்சு” என கூறி அவரை ட்ரோல் செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here