“என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்கள்”.. வைரலாகும் விஜய்யின் புதிய அறிக்கை!!

0

கோலிவுட் திரையில் ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகர்களில் ஒருவராக ஜொலித்துக் கொண்டிருப்பவர் தான் விஜய். தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் (G. O. A .T) என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் கடந்த பிப்ரவரி 2ம் தேதி விஜய் தனது கட்சியின் பெயரை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதற்கு ஆதரவும் விமர்சனமும் எழுந்து வருகின்றன. இந்த நிலையில் விஜய், நன்றி தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

அதில், அனைவருக்கும் வணக்கம், தமிழ்நாட்டு மக்களின் பேரன்போடு நான் முன்னெடுத்துள்ள அரசியல் பயணத்திற்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்த பெருமதிப்புக்குரிய பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், அன்புக்குரிய திரைத்துறை நண்பர்கள், பாசத்துக்குரிய தமிழக தாய்மார்கள், சகோதர, சகோதரிகள், ஊக்கமளிக்கும் ஊடகவியலாளர்கள், “என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்கள்” அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளுடன் பணிவான வணக்கங்கள், அன்புடன், விஜய்தமிழக வெற்றி கழகம் என்று தெரிவித்து தனது உரையை முடித்துள்ளார்.

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here