IND vs ENG 2nd Test Day 3: சுப்மன் கில் அதிரடி சதம்…, தோல்வியை நோக்கி இங்கிலாந்து!!

0

பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து ஆடவர் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது போட்டி கடந்த 2ம் தேதி முதல் தொடங்கி மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 28 ரன்களை குவித்து இருந்தது. எனவே 3ம் நாள் ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணியில் கில் மற்றும் அக்சர் பட்டேல் சிறப்பாக விளையாடி அசத்தினர்.

ஒரு பக்கம் தொடர்ந்து விக்கெட்கள் சரிந்தாலும், இவர்கள் இருவரும் பொறுப்பாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். குறிப்பாக கில் சதம் அடித்து மிரட்டினார். இதை அடுத்து இந்தியா 396 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து சார்பில் டாம் ஹார்ட்லி 4 விக்கெட்களை சாய்த்தார். இந்த நாள் முடிவில் இங்கிலாந்து அணி 67 ரன்களை குவித்து 332 ரன்கள் பின்னிலையில் உள்ளது. இதையடுத்து 4ஆம் நாள் ஆட்டம் இந்திய நேரப்படி நாளை (பிப்ரவரி 5) காலை 9.30 மணிக்கு தொடங்கும்.

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here