தமிழக பட்ஜெட் தாக்கல் 2024: மகளிர் உரிமைத் தொகையில் வர இருக்கும் பெரிய மாற்றம்…, வெளியான முக்கிய தகவல்!!

0
தமிழக பட்ஜெட் தாக்கல் 2024: மகளிர் உரிமைத் தொகையில் வர இருக்கும் பெரிய மாற்றம்..., வெளியான முக்கிய தகவல்!!
தமிழக பட்ஜெட் தாக்கல் 2024: மகளிர் உரிமைத் தொகையில் வர இருக்கும் பெரிய மாற்றம்..., வெளியான முக்கிய தகவல்!!
இந்தியாவின் 18வது மக்களவை தேர்தல் நடப்பு வருடம் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தல் வரும் ஏப்ரல், மே மாதத்திற்குள் நடைபெற கூடும் என்பதால் 2024-2025 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் வழக்கத்தை விட முன்னதாக நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், ஆண்டுதோறும் மார்ச் முதல் வாரத்தில் நடைபெறும் பட்ஜெட் தாக்கல், தமிழகத்தில் இம்மாதத்தில் (பிப்ரவரி) நடைபெற இருக்கிறது. அதாவது, தமிழகத்தில் சட்டமன்றக் கூட்டத் தொடர் பிப்ரவரி 12ஆம் தேதி தொடங்கி பட்ஜெட் தாக்கல் பிப்ரவரி 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற பட்ஜெட் தாக்கலில் தான் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, செப்டம்பர் மாதம் முதல் இந்த திட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்டது.

Enewz Tamil WhatsApp Channel 

தற்போது வரை இந்த திட்டத்தில் சுமார் ஒரு கோடியே 15 லட்சம் பயன்பெற்று வரும் நிலையில், எதிர்வரும் பட்ஜெட் தாக்கலில் மகளிர் உரிமை தொகைக்கு என கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், புதிய ரேஷன் கார்டு பெற்றவர்களும் இந்த மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பயன்பெறும் வகையில் ஏற்பாடு செய்யப்படும் என தகவல்  வெளியாகி உள்ளது. இருப்பினும், உரிமைத் தொகை ரூ. 1000 த்தை அதிகரிப்பது குறித்து இந்த பட்ஜெட் தாக்கலில் முடிவெடுக்க வாய்ப்பில்லை. ஆனால், திட்டத்தின் பயனாளர்களை அதிகரிக்க அதிக வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here