நடிகர் விஜய்யின் சொந்த வீட்டை ஜப்தி செய்ய உத்தரவு – பணத்தைக் கட்டாததால் நீதிமன்றம் அதிரடி!!

0
நடிகர் விஜய்யின் சொந்த வீட்டை ஜப்தி செய்ய உத்தரவு - பணத்தைக் கட்டாததால் நீதிமன்றம் அதிரடி!!

விஜய் பிறந்து வளர்ந்த, சாலிகிராமத்தில் உள்ள அவரது சொந்த வீட்டில் உள்ள பொருட்களை ஜப்தி செய்ய சென்னை எழும்பூர் உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 நீதிமன்றம் உத்தரவு  :

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். ஒரு படத்திற்கு, இவர் 100 முதல் 120 கோடி வரை சம்பளம் பெற்று வருகிறார்.  இந்த நிலையில், நடிகர் விஜய் தனது பெற்றோருடன் சாலிகிராமத்தில் உள்ள அவரது பூர்வீக வீட்டில் தான் பிறந்து வளர்ந்தார் என்று சொல்லப்படுகிறது.  தற்போது இந்த வீட்டை, விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சி அலுவலகமாக மாற்றி உள்ளார்.

படத்தில் தப்பு இருந்தால் பாக்காதீங்க - ஜெய்பீம் படம் குறித்து நடிகர் விஜய்யின் தந்தை காட்டம்!!

தற்போது, விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் கடந்த 2011 ஆம் ஆண்டு தனது சட்டப்படி குற்றம் என்ற படத்தில் விளம்பரம் செய்வதற்காக  சரவணன் என்பவர் உடன் ஒப்பந்தம் செய்து  கொண்டார். ஆனால் இந்த ஒப்பந்தத்திற்கான பணத்தை எஸ்.ஏ.சி கொடுக்காததால், அவருக்கு எதிராக சரவணன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

தற்போது, அந்த பணத்தை உடனடியாக எஸ்.ஏ.சி  செலுத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டும், பணத்தை கொடுக்காததால்  சாலிகிராமத்தில் அவரது அலுவலகத்தில் உள்ள பொருட்களை ஜப்தி செய்ய  எழும்பூர் உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வெறும் 76, 122 ரூபாய் பணத்திற்காக விஜய் வசித்த சொந்த வீட்டில் உள்ள பொருள் ஜப்திக்குள்ளாகும் நிலை சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here