பாண்டியன் ஸ்டோர்ஸ் தனத்தின்  வீட்டில்  நடந்த மரணம்..,  சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!!!

0

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பிரபலமானவர் தான் சூர்யா கிரண். இவர் தமிழில் ரஜினிகாந்த் நடித்த படிக்காதவன், மௌன கீதங்கள் உள்ளிட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளிலும் பல படங்களில் நடித்துள்ளார். நடிப்பதில் மட்டுமல்லாமல் இயக்கத்தில் ஆர்வம் கொண்ட இவர் தானா 51, பிரம்மாஸ்திரம், ராஜு பாய், அத்தியாயம் 6 போன்ற படங்களையும் இயக்கி உள்ளார்.

தமிழகத்தில் சப்-இன்ஸ்பெக்டர் பணியிடத்திற்கான தேர்வு அறிவிப்பு., இந்த தேதியில் தான்? TNUSRB மாஸ் அப்டேட்!!!

இப்படி சினிமாவில் முக்கிய இடத்தில் இருக்கும் சூர்யா கிரண் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தனம் கதாபாத்திரத்தில் நடித்த சுஜிதாவின் அண்ணன். அதுமட்டுமல்லாமல் சமுத்திரம் படத்தில் சரத்குமாருக்கு தங்கையாக நடித்த காவேரியின் கணவரும் ஆவார். இருவரும் தற்போது கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கின்றனர். இந்நிலையில் 49 வயதான சூர்யா கிரண் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று இவர் உயிரிழந்தார். இவரது இறப்பிற்கு திரை துறையினர் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here