கொரோனாவின் கோரத்திற்கு பலியான காமெடி நடிகர் சூர்யகாந்த் – துயரத்தில் திரையுலகம்!!

0

தற்போது பலரும் கொரோனாவின் பிடியில் சிக்கி பலியாகி வருகின்றனர். இந்நிலையில் திரையுலகில் முக்கிய நடிகராக திகழ்ந்த நடிகர் சூர்யகாந்த் கொரோனாவினால் பலியாகியுள்ளார். பலரும் இவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

நடிகர் சூர்யகாந்த்:

தற்போது கொரோனாவின் மூன்றாம் அலையின் தாக்கம் ஆரம்பமாகியுள்ளது. முதல் மற்றும் இரண்டாம் அலையை காட்டிலும் மூன்றாம் அலையில் கொரோனா பரவல் மிக அதிகமாக உள்ளது. அரசும் பல தரப்பில் இருந்து தீவிர நடவடக்கைகளை செயல்படுத்திக்கொண்டே தான் வருகின்றனர். இருந்தாலும் கொரோனாவினால் பலியாகும் உயிர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. 1980களில் இருந்து தற்போது வரை பல திரைப்படங்களில் சிறு சிறு கதாபாத்திரத்தில் சூர்யகாந்த் நடித்து கொண்டு வந்தார்.

பாய்ஸ், சிங்கம், காலா, கைதி, காக்கி சட்டை, வடசென்னை, சங்கத்தமிழன் மற்றும் பல திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார். இவர் சில நாட்களுக்கு முன்பாக கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது சிகிச்சை பலனின்றி மருத்துவமனையிலே உயிரிழந்து உள்ளார். இவரது மரணம் திரையுலகினரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. தற்போது இவரது ரசிகர்களும் திரையுலகினரும் இவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here