சித்தார்த் ஏன் இப்படி பண்ணாருன்னு தெரியலை – சாய்னா நேவால் பரபரப்பு பேட்டி!!

0

பிரதமரின் பாதுகாப்பு குறைபாடு குறித்து, கருத்து தெரிவித்த விளையாட்டு வீராங்கனை சாய்னா நேவால் பதிவிற்கு நடிகர் சித்தார்த் தெரிவித்த அவதூறு கருத்துக்கு தற்போது சாய்னா பதிலளித்துள்ளார்.

சர்ச்சைக் கருத்து :

நலத்திட்ட உதவிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக பஞ்சாப் சென்ற பிரதமருக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றதால், போராட்டக்கார்களால் அவர் கார் பஞ்சாப் எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டது. நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவம், குறித்து பிரதமர் மோடி அண்மையில் ஜனாதிபதியை சந்தித்து இது குறித்து விளக்கினார்.

பல்வேறு அரசியல் பிரபலங்களும் இதுகுறித்து கருத்து தெரிவித்தனர். இது குறித்து பேட்மிட்டன் விளையாட்டு வீராங்கனையான சாய்னா நேவால் சோசியல் மீடியாவில் கருத்து தெரிவித்தார். பிரதமருக்கு ஏற்பட்ட இந்த நிலை மிகவும் கண்டனத்துக்கு உரியது என வேதனை தெரிவித்தார். இந்த கருத்துக்கு பதிலளித்த நடிகர் சித்தார்த், சாய்னாவை கேவலமான வார்த்தைகளால் விமர்சித்தார்.

இதற்கு பதிலளித்துள்ள, சாய்னா நோவால் தனக்கு சித்தார்த்தை ரொம்ப பிடிக்கும் எனவும் இருந்தாலும் அவர் இப்படி பேசியிருக்க கூடாது என்றும் தெரிவித்துள்ளார். தனது சொந்த கருத்தை தெரிவிக்க உரிமை இருக்கிறது, ஆனால் அதை சொல்வதற்கு இந்த கேவலமான வார்த்தையை தான் பயன்படுத்த வேண்டுமா என கேள்வி எழுப்பி உள்ளார். அவரின் இந்த பேச்சு மிகவும் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here