கங்குவா-வை தொடர்ந்து Sci-Fi கதையில் நடிக்கும் சூர்யா.., இயக்குனர் யார் தெரியுமா? வெளியான லேட்டஸ்ட் அப்டேட்!!

0

தென்னிந்திய திரையில் தனக்கென தனி புகழுடன் ஜொலித்து கொண்டிருப்பவர் தான் சூர்யா. தற்போது இவர் நடிப்பில் உருவாகி வரும் “கங்குவா” திரைப்படம் வரும் மே மாதம் வெளியாக இருக்கிறது. இதில் சில வரலாற்று கதைகள் இருக்கிறது என்று படக்குழு முன்னரே அறிவித்திருந்தது. அதே போல் இப்படத்தின் டீசர் மற்றும் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை தூண்டியது. இந்நிலையில் நடிகர் சூர்யா SCI -FI கதையில் நடிக்க இருப்பதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது நடிகர் சூர்யாவை வைத்து, SCIENCE FICTION கதையை மையமாக கொண்டு அயலான் பட இயக்குனர் ரவிக்குமார் இயக்க இருக்கிறாராம். இப்படம் 200 கோடி பட்ஜெட்டில் உருவாக இருக்கிறதாம். மேலும் இப்படத்தின் ஷூட்டிங் வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் ஆரம்பிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Enewz Tamil WhatsApp Channel 

தமிழக பள்ளி மாணவர்களே.., பிப்.20 (நாளை) விடுமுறை.., அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here