டாப் ஹீரோக்கள் வரிசையில் இணைந்த  நடிகர் சிம்பு – அரசே கொடுத்த முக்கிய அங்கீகாரம்!!

0
திருமணத்திற்காக தடல்புடலாக ரெடியாகி வரும் சிம்பு - மனைவிக்காக இப்போதே பரிசு வாங்கி அசத்தல்!!

உலகநாயகன் கமல்ஹாசனை தொடர்ந்து, நடிகர் சிம்புவுக்கு ஐக்கிய அரபு அமீரகம் கோல்டன் விசா வழங்கி கௌரவ படுத்தியுள்ளது.

சிம்புவுக்கு கவுரவம்:

தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக திகழ்ந்து வருபவர் நடிகர் சிம்பு. இவர் நடிப்பில் உருவாகி, கடந்தாண்டு வெளியான மாநாடு திரைப்படம் பிளாக்பஸ்டர் வெற்றியை படைத்தது. தொடர்ந்து, தற்போது இவர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், வெந்து தணிந்தது காடு என்ற படத்தில் நடித்து வருகிறார்.

தற்போது, இவர் தன் தந்தை டி. ராஜேந்தர் உடல்நிலையில் முழுக் கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில், உலகநாயகன் கமலுக்கு அண்மையில் ஐக்கிய அரபு அமீரகம் அண்மையில் கோல்டன் விசா வழங்கியது.

இதுவரை விஜய் சேதுபதி, மோகன்லால், மம்முட்டி, பார்த்திபன், ரம்யா கிருஷ்ணன், த்ரிஷா உள்ளிட்ட பல பிரபலங்களுக்கு இந்த விசா வழங்கப்பட்டுள்ளது. தற்போது இந்த சிறப்பு அங்கீகாரம் நடிகர் சிம்புவுக்கும் வழங்கப்பட்டுள்ளது. இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here