‘ஸ்புட்னிக் வி’ தடுப்பூசி செலுத்தி கொண்ட திரைப்பிரபலம்…!புகைப்படத்தை ஷேர் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்திய சிபிராஜ்!!!

0

கொரோனா என்னும் பெருந்தொற்றில் இருந்துஅனைவரும் தங்களை காத்து கொள்ள தடுப்பூசி ஒரு ஆயுதமாக விளங்குகிறது. இந்நிலையில் பல பிரபலங்கள் மற்றும் திரைதுறையினர் பலரும் தடுப்பூசியை செலுத்தி கொண்டு தங்களின் புகைப்படங்களை பகிர்ந்து மக்களுக்கு விழிப்புணர்வு  ஏற்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் நடிகர் சிபிராஜ் அவர்களும் ‘ஸ்புட்னிக் வி’ தடுப்பூசி போட்டுகொண்டு அந்த புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி  நடிகராக விளங்கும்  நடிகர் சத்யராஜ் அவர்களின்  மகன் தான் நடிகர் சிபிராஜ். இவரும் தமிழ் மொழியில் பல படங்களில் நடித்துள்ளார். இருப்பினும் அவரின் தந்தை அளவிற்கு புகழ் அடைய முடியவில்லை. மேலும் முதலில் தந்தை உடன் சேர்ந்து படங்களில் நடித்து வந்தார். அதன் பிறகு தனியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் கொரோனா என்னும் கொல்லுயிரி நாட்டை ஆட்டிப் படைத்து வருகிறது. எனவே அதிலிருந்து தங்களை காத்துக்கொள்ள தடுப்பூசி மட்டுமே பேராயுதமாக விளங்குவதாக அனைத்து தரப்பினரும் தெரிவித்து வருகின்றனர். இதனை அடுத்து, தடுப்பூசி பற்றிய தவறான கருத்துக்களை போக்க பல பிரபலங்கள் மற்றும் திரைதுறையினர் தடுப்பூசி போட்டு கொண்டு புகைப்படங்களை வெளியிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் அந்த வகையில் நடிகர் சூர்யா, கார்த்தி, ஜெய், யோகி பாபு மற்றும் நடிகை ஜோதிகா, ஜனனி, நயன்தாரா மற்றும்  பல சின்னத்திரை பிரபலங்களும் கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டு தங்களின் புகைப்படங்களை வெளியிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அந்த வரிசையில் நடிகர் சிபிராஜ், தற்போது பயன்பாட்டுக்கு வந்திருக்கும் மூன்றாவது கொரோனா தடுப்பூசியான ‘ஸ்புட்னிக் வி’ செலுத்தி கொண்டு உள்ளார். மேலும் அப்போது எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here