மோடியின் புதிய அமைச்சரவை: 42% அமைச்சர்கள் மீது பதிவாகியுள்ள கிரிமினல் வழக்குகள்!!

0
பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் தற்போது உள்ள 78 அமைச்சர்களை ஜனநாயகத்துக்கான சீர்திருத்த அமைப்பு (Association for Democratic Reforms) ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் 42% அமைச்சர்கள் மீது கிரிமினல் வழக்குகள் பதிவாகியுள்ளது. மேலும் 90 சதவீதம்  அமைச்சர்கள் கோடிஸ்வரர்கள்.
இரண்டு ஆண்டுகளாக பிரதமர் நரேந்திர மோடியின் அமைச்சரவையில் புதிதாக மாற்றம் எதுவும் இல்லாமல் இருந்த நிலையில் கடந்த புதன் கிழமை புதிய மத்திய அமைச்சர்களாக 43 பேர் பதவியேற்றனர். அதில் 15 கேபினெட் அமைச்சர்கள், 28 அமைச்சர்கள் புதிதாக சேர்க்கப்பட்டனர்.
இந்நிலையில் ஜனநாயகத்துக்கான சீர்திருத்த அமைப்பின் அறிக்கையின் அடிப்படையில் தற்போது உள்ள 78 அமைச்சர்கள் 42% அமைச்சர்களின் மீது ஏற்கனவே கிரிமினல் வழக்குகள் பதிவாகி உள்ளன. அதில் 31% மந்திரிகள் மீது கொலை மற்றும் கொலை முயற்சி, வழிப்பறி உள்ளிட்ட வழக்குகள் பதிவாகியுள்ளன. அதே போல 90% அமைச்சர்கள் கோடீஸ்வரர்களாக உள்ளனர்.
இதோடு சேர்த்து ஜனநாயகத்துக்கான சீர்திருத்த அமைப்பு மத்திய அமைச்சர்களின் கல்வி விவரத்தையும் வெளியிட்டுள்ளது. அதன் படி 17 அமைச்சர்கள் பட்டதாரிகள், 21 அமைச்சர்கள் முதுகலைப் படிப்பு முடித்தவர்கள், 12 அமைச்சர்கள் 12 ஆம் வகுப்பு வரையும், 3 அமைச்சர்கள் பத்தாம் வகுப்பு வரையும், 2 அமைச்சர்கள் எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here