அடேய் நான் உங்களுக்கு என்னடா பண்ணுனேன் – சமுத்திரக்கனியை வச்சு செய்யும் மீம் கிரியேட்டர்ஸ்..!

0
78

கடந்த சில நாட்களாக சமுத்திரகனியின் பெயரை கிண்டல் செய்தும் அவர் படங்களில் பேசிய வசனங்களை கிண்டல் செய்தும் பல வகையான மீம்கள் வைரலாகி வருகின்றன.

வச்சு செய்யும் மீம் கிரியேட்டர்கள்..!

திடீரென மீம் கிரியேட்டர்கள் மொத்தமாக சமுத்திரகனியை கிண்டல் செய்ய என்ன காரணம் என்று ஆராய்ந்த போது எதேர்ச்சையாக சில மீம் கிரியேட்டரகள் சமூக வலைத்தளங்களில் எப்போதும் போல் அவரை கிண்டல் செய்து வந்தனர்.

இந்த நேரத்தில் இருந்த கொரோனா தொற்றுக்கு சில அரவேக்காடுகள் சமுத்திரகனியின் பட வசனங்களை வைத்து தொற்றுக்கு காமெடியாக ஆறுதல் கூற, இதன்பின் சமுத்திரகனியை மீம் கிரியேட்டர்கள் மீம்களின் வாயிலாக அதிக படியாக கிண்டல் செய்ய துவங்கி விட்டனர்.

ரசிகர்களுக்கு விருந்து..!

இவர்கள் ஆரம்பத்தில் கொடுத்த மீம்கள் அனைத்தும் ரசிகர்களை வெகுவாக கவர, அடுத்தடுத்து அனைத்து மீம்கிரியேட்டர்களும் கோதாவில் குதித்தனர். இப்படியான விஷயம் அடிக்கடி அல்ல தினம் தோறும் சமூக வலைத்தளங்களில் நடப்பது மிக சாதாரணமான விஷயமாகும்

இந்த நேரத்தில் மீம்களுக்கு மௌவுசு கூட இது மட்டும் காரணம் அல்ல, கொரோனா தொற்று பரவ கூடாது என்பதனால் ஊரடங்கு உத்தரவை 21 நாட்களுக்கு பிறப்பித்து உள்ளது அரசு. இந்த நேரத்தில் இணையத்தில் மூழ்கிய அனைத்து ரசிகர்களுக்கும் இதுதான் விருந்து.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here