சிண்டிகேட், பஞ்சாப் உட்பட 10 வங்கிகள் இனிமேல் கிடையாது, வேறு வங்கிகளுடன் இணைக்கப்படும்..! எப்போது முதல் தெரியுமா..?

0
நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் தொடர்ந்து 2 நாட்கள் ஸ்டிரைக் - வாடிக்கையாளர்கள் பலத்த அதிர்ச்சி!!
நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் தொடர்ந்து 2 நாட்கள் ஸ்டிரைக் - வாடிக்கையாளர்கள் பலத்த அதிர்ச்சி!!

வங்கித்துறைகளை வலுப்படுத்தும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு உள்ளது. இதன் ஒரு பகுதியாக 10 பொதுத்துறை வங்கிகளை 4 வங்கிகளாக இணைக்க திட்டமிட்டு உள்ளது. அதுகுறித்த விபரங்கள் தற்போது வெளியிடப்பட்டு உள்ளன.

பொதுத்துறை வங்கிகள்:

இந்த புதிய நடவடிக்கையின்படி நாட்டிலுள்ள யுனைடெட் பேங்க், சிண்டிகேட் வங்கி போன்ற 10 வங்கிகள் 4 பொதுத்துறை வங்கிகளுடன் இணைக்கப்படுகின்றன. இந்த திட்டத்தை ஏப்ரல் 1 முதல் செயல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.

மேலும் குறிப்பிடப்பட்ட வங்கிகளில் உள்ள வாடிக்கையாளர்களின் கணக்கு விபரங்கள் இணைக்கப்படும் அந்தந்த குறிப்பிடப்பட்ட வங்கிகளுக்கு மாற்றப்படும். இதன்படி இனிமேல் இணைக்கப்பட உள்ள வங்கிகளின் விபரம்,

  • ஓரியன்டல் பேங்க் ஆப் காமர்ஸ், யுனைடெட் பேங்க் ஆப் இந்தியா வங்கிகள் – பஞ்சாப் நேஷனல் வங்கி
  • சிண்டிகேட் வங்கி – கனரா வங்கி
  • ஆந்திரா வங்கி, கார்ப்பரேஷன் வங்கி – யூனியன் பேங்க் ஆப் இந்தியா
  • அலஹாபாத் வங்கி – இந்தியன் வங்கி

இதன் மூலம் நாட்டிலுள்ள மொத்த பொதுத்துறை வங்கிகளின் எண்ணிக்கை 12 ஆக குறைந்துள்ளது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here