பெரியார் குறித்த சர்ச்சை பேச்சுக்கு ‘மன்னிப்பு கேட்க முடியாது’ – ரஜினி திட்டவட்டம்

0
Rajini Press Meet

சென்னை கலைவாணர் அரங்கில் துக்ளக் இதழின் 50ஆம் ஆண்டு நிறைவு விழா கடந்த வாரம் நடைபெற்றது. இதில் துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி, துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, பல்வேறு பாஜகவினர் மற்றும் பல்வேரு முக்கிய நபர்கள், அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து

விழாவில் துக்ளக் இதழ் குறித்து பேசிய ரஜினிகாந்த், பெரியாரை கடுமையாக விமர்சித்தவர் சோ. இந்துக்கடவுளுக்கு எதிராக பெரியார் பேரணி செய்தார். இந்து கடவுள்களை பெரியார் விமர்சித்ததை பற்றி சோ மட்டும் தைரியமாக துக்ளக்கில் எழுதினார். அப்போதைய முதல்வர் கருணாநிதி அதை கடுமையாக எதிர்த்தார். இதனால் துக்ளக் பத்திரிக்கை நாடு முழுக்க பிரபலம் அடைந்தது என்று கூறினார்.

Image result for whatsapp logo

வாட்ஸ்ஆப் குரூப்பில் சேர இங்கே கிளிக் செய்யவும்

Image result for telegram logo

டெலிகிராம் சேனலில் சேர இங்கே கிளிக் செய்யவும்

பல்வேறு எதிர்ப்பு

ரஜினியின் இந்த சர்ச்சைக்குரிய பேச்சிற்கு எதிராக பல இடங்களில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. திராவிட விடுதலை கழகம், பெரியார் திராவிட கழகம் உட்பட அமைப்புகள் ரஜினி மீது போலீசில் புகார் அளித்துள்ளது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினி,

Image result for youtube logo

யூடூப் சேனலில் தொடர இங்கே கிளிக் செய்யவும்

1971ல் நடந்த பேரணி குறித்து பேசியதற்காக மன்னிப்பு கேட்க முடியாது, கற்பனையாக எதுவும் நான் கூறவில்லை. நான் பேசியது மறுக்கப்பட வேண்டியது அல்ல, மறக்கப்பட வேண்டியது. 1971-ல் ராமர்-சீதை படங்கள் உடையில்லாமல் கொண்டுவர பட்டது உண்மைதான்.நான் ஒன்றும் இல்லாததை கூறவில்லை. இது போன்ற இதழ்களில் வந்ததை தான் நான் கூறினேன். இதற்காக நான் மன்னிப்பு கூறவோ, வருத்தம் தெரிவிக்கவோ முடியாது என தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றேன் என்று கூறினார்.

இதனால் சர்ச்சை கிளம்பியுள்ள நிலையில் ரஜினியின் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here