சொந்த வீட்டை இழந்த நடிகர் மாதவன்? தற்போதைய நிலை குறித்து அவரே வெளியிட்ட முக்கிய பதிவு!!

0
தனது 51-வது பிறந்த நாளை குடும்பத்துடன் கொண்டாடிய மாதவன் - வைரலாகும் கலக்கல் போட்டோஸ்!!
சொந்த வீட்டை இழந்த நடிகர் மாதவன்? தற்போதைய நிலை குறித்து அவரே வெளியிட்ட முக்கிய பதிவு!!

முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்று படமான ராக்கெட்ரியால், நடிகர் மாதவன் தனது சொந்த வீட்டை இழந்ததாக வெளியான வதந்திக்கு  விளக்கம் அளித்துள்ளார்.

மாதவன் விளக்கம்:

90ஸ்  களின் முன்னணி நாயகனான  சாக்லேட் பாய் மாதவன்,  தொடர்ந்து பல ஹிட் படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில், முன்னாள் விஞ்ஞானியான நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி ராக்கெட்ரி  என்ற படத்தை இயக்கியிருந்தார். இந்தத் திரைப்படம், சர்வதேச கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு முக்கிய அரசியல் பிரபலங்களின் வாழ்த்துக்களை பெற்றுள்ளது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இது மட்டுமல்லாமல், இந்த படக்குழுவினரை பிரதமர் மோடி நேரில் அழைத்து பாராட்டி இருந்தார். இந்த நிலையில், இந்தப் படத்தின் நிதிக்காக நடிகர் மாதவன் அவரது வீட்டை இழந்ததாக தகவல் வெளியானது. இது குறித்து பேசிய மேடி, தனது தியாகத்தை இப்படி அதிகமாக ஆதரிக்காதீர்கள்.

கடவுளின் அருளால் நான் எனது சொந்த வீட்டில் தான் இருக்கிறேன். இந்த பெருமையான படத்திற்காக எல்லோரும் நல்ல லாபம் பார்த்து உள்ளோம். தேவையற்ற வதந்திகள் வேண்டாம் என பதிவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here