இந்த Risk எல்லாம் தேவையா விஜய்.. தளபதி 67 குறித்து வெளியான சோகமான அப்டேட் – வருத்தத்தில் ரசிகர்கள்!

0
விஜய் நழுவ விட்டு மெகா ஹிட் திரைப்படம்.., சோகத்தில் புலம்பும் தளபதி ரசிகர்கள்!!
விஜய் நழுவ விட்டு மெகா ஹிட் திரைப்படம்.., சோகத்தில் புலம்பும் தளபதி ரசிகர்கள்!!

விஜய் – லோகேஷ் கனகராஜ் இணையும் தளபதி 67 படம் குறித்த தகவல்கள் தற்போது இணையத்தில் வெளியாகி பேசுபொருளாகி உள்ளது.

தளபதி 67:

தமிழ் சினிமாவில் தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து முக்கிய இயக்குனராக திகழ்பவர் தான் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இவர் இயற்றிய முதல் படமான மாநகரம் திரைப்படம் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. தொடர்ந்து கைதி, மாஸ்டர், விக்ரம் என வெற்றி படங்களை கொடுத்தார். இதனால் இவருக்கு ஏராளமான ரசிகர் பட்டாளங்கள் உருவாகியுள்ளனர். இந்நிலையில் அண்மையில் ஒரு பேட்டியில் இயக்குனர் லோகேஷ் தளபதி 67 படம் பற்றி சில தகவல்களை தெரிவித்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதாவது, மாஸ்டர் படம் விமர்சன ரீதியாக சில நெகட்டிவ் விமர்சனத்தை பெற்றது. எனவே தளபதி 67 என்னுடைய பாணியில் இருக்கும் என்று கூறியுள்ளார். மேலும் இதில் சமந்தா நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும், கிட்டத்தட்ட 5 வில்லன்கள் படத்தில் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமின்றி இந்த படத்தில் பாடல்கள் இடம்பெறவில்லை என்று கூறப்படுகிறது. பொதுவாகவே விஜய் படம் என்றாலே பாடல்கள் தனி கவனம் பெரும். ஆனால் தளபதி 67 படத்தில் பாடல்கள் இல்லை என்பது ரசிகர்களுக்கு வருத்தத்தை அளித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here