நடிகர் கார்த்தி சூர்யாவுடன் கைக்கோர்த்து செய்த காரியம் – பாராட்டுகளை குவிக்கும் நெட்டிசன்கள்!!

0
நடிகர் கார்த்தி சூர்யாவுடன் கைக்கோர்த்து செய்த காரியம் - பாராட்டுகளை குவிக்கும் நெட்டிசன்கள்!!

நடிகர் கார்த்தி தனது நண்பர்கள் மற்றும் அகரம் பவுண்டேசனுடன் சேர்ந்து சிதிலமடைந்த அரசு பள்ளி ஒன்றை சீரமைத்து, கொடுத்து மிகப்பெரிய சமூக சேவை புரிந்துள்ளார்.

கார்த்தி சேவை:

நடிகர் கார்த்தி மற்றும் அதிதி சங்கர் நடிப்பில் உருவாகியுள்ள விருமன் திரைப்படம், வருகிற ஆகஸ்ட் 12ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. படத்திற்கான பிரமோஷன் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் பிரஸ் மீட் நிகழ்ச்சியில் பேசிய நடிகர் கார்த்தி, ஷூட்டிங்கில் நடந்த சுவாரஸ்ய சம்பவம் ஒன்றை தெரிவித்துள்ளார்.

அதாவது, தனது படத்தின் ஷூட்டிங் போது சிதிலமடைந்த பள்ளி ஒன்றை  தான் பார்த்ததாகவும், அந்த பள்ளியின் நிலையை பார்த்து தான் மிரண்டு போனதாகவும் தெரிவித்தார். பின் அந்தப் பள்ளியை  தனது நண்பர்கள் மற்றும் சூர்யாவின் அகரம் பவுண்டேஷன் உதவியுடன்  சீரமைத்து கொடுத்துள்ளார்.

இதையடுத்து அந்த கிராம மக்கள் தனக்கு பாராட்டு தெரிவித்ததாகவும், இது போன்ற சிதிலமடைந்த அனைத்து பள்ளிகளையும் சீரமைக்க எல்லாரும் முன்வர வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். நடிகர் கார்த்தியின் இந்த செயலுக்கு, பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here