விவாகரத்திற்கு பிறகு தனுஷ் வாழ்க்கையில் இப்படி ஒரு வெற்றியா?? பாராட்டு மழைகளை பொழியும் ரசிகர்கள்!!

0
விவாகரத்திற்கு பிறகு தனுஷ் வாழ்க்கையில் இப்படி ஒரு வெற்றியா?? பாராட்டு மழைகளை பொழியும் ரசிகர்கள்!!

தமிழ் சினிமாவின் ஆரம்ப கட்டத்தில் கடுமையான விமர்சனங்களை பெற்று தனது கடின உழைப்பால் தற்போது முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் தனுஷ். இவரது நடிப்பில் வெளியான ஆடுகளம், அசுரன் போன்ற படங்களில் நடித்ததற்காக இரண்டு முறை தேசிய விருதுகளை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

வரிசையில் ஜகமே தந்திரம், மாறன் போன்ற படங்கள் தனுஷுக்கு பிளாப் தான். அதுமட்டுமின்றி இந்த திரைப்படங்கள் அனைத்தும் ஓடிடி தளங்களில் வெளியானது. இவ்வாறு தொடர்ந்து தோல்வி படங்களை கொடுத்த நடிகர் தனுஷுக்கு திருப்புமுனையாக அமைந்த திரைப்படம் என்றால் அது திருச்சிற்றம்பலம் தான்.

விக்ரம் பிரபுவை வாயடைக்க வைத்த பொன்னியின் செல்வன் பட கதாபாத்திரம்.., புரொமோஷனில் நடந்த சம்பவம்!!

கடந்த மாதம் திரையரங்கில் வெளியான இப்படம் கிட்டத்தட்ட ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்து பாக்ஸ் ஆபிஸில் பிளாக்பஸ்டர் ஹிட் படமாக அமைந்தது. இதனால் தனுஷின் ரசிகர்களை இந்த வெற்றியை கொண்டாடி வருகின்றனர். விவாகரத்திற்கு பிறகு இப்படி தொடர்ந்து தனுஷ் வெற்றி படங்களை கொடுத்து வருகிறார். மேலும் நானே வருவேன், வாத்தி, கேப்டன் மில்லர் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். ஒரே வருடத்தில் இதனை படங்களில் கமிட்டாகி வரும் தனுஷிற்கு ரசிகர்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here