சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த “துணிவு” திரைப்படம்..,ரசிகர்கள் செய்த காரியத்தால் படக்குழுவினர் நெகிழ்ச்சி!!

0
சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த
சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த "துணிவு" திரைப்படம்..,ரசிகர்கள் செய்த காரியத்தால் படக்குழுவினர் நெகிழ்ச்சி!!

தமிழ் சினிமாவில் ஐகானிக் ஹீரோவாக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகர் அஜித்குமார். தற்போது இயக்குனர் வினோத்துடன் மூன்றாவது முறையாக இணைந்து துணிவு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். அதுபோக இப்படத்தில் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ரசிகர்களின் பெரிய எதிர்பார்ப்பில் இருந்த இந்த திரைப்படம் நேற்று வெளியானது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

தற்போது அஜித்தின் துணிவு திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. பெரிய நடிகர்கள் படங்கள் வெளியானதால் அரசாங்கம் சில விதிமுறைகளை அறிவுறுத்தியது. அதன் படி பெரிய கட் அவுட், பேனர் மற்றும் பாலாபிஷேகம் போன்றவைகள் செய்ய கூடாது என்று எச்சரித்தது.

பாண்டி சொன்னது உண்மைதான்! ஆனா அவன் ஆம்பளையே கிடையாது., ஆக்ரோஷத்தில் கண்ணம்மா! சூடு பிடிக்கும் எபிசோட்ஸ்!!

இருப்பினும் அஜித் ரசிகர்கள் பெரிய பேனர்களை வைத்து அலப்பறை கொடுத்துள்ளனர். இந்நிலையில் அஜித்தின் பெரிய கட் அவுட் குறித்து சமூக வலைத்தளங்களில் முக்கியமான அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது மலேசியாவில் அஜித் ரசிகர்கள் கிட்டத்தட்ட 9.144 மீட்டர் உயர பிரமாண்ட கட் அவுட் ஒன்றை வைத்துள்ளனர். இந்த துணிவு படத்தின் கட் அவுட் சாதனை புத்தகத்தில் இடம் பெற்று சாதனை படைத்துள்ளது. இந்த சந்தோஷத்தை ரசிகர்கள் வெகு சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here