பாண்டி சொன்னது உண்மைதான்! ஆனா அவன் ஆம்பளையே கிடையாது., ஆக்ரோஷத்தில் கண்ணம்மா! சூடு பிடிக்கும் எபிசோட்ஸ்!!

0
பாண்டி சொன்னது உண்மைதான்! ஆனா அவன் ஆம்பளையே கிடையாது., ஆக்ரோஷத்தில் கண்ணம்மா! சூடு பிடிக்கும் எபிசோட்ஸ்!!
பாண்டி சொன்னது உண்மைதான்! ஆனா அவன் ஆம்பளையே கிடையாது., ஆக்ரோஷத்தில் கண்ணம்மா! சூடு பிடிக்கும் எபிசோட்ஸ்!!

விஜய் டிவியில், விறுவிறுப்பான கதைக்களத்தில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பாரதிகண்ணம்மா தொடரின், இன்றைய தொடக்கத்தில் சுந்தரம் கண்ணம்மாவிடம் நீ உன் புருஷன் கூட சேர்ந்து வாழுமானு சொன்னதும், கண்ணம்மா ஏன் இப்போ திடீர்னு இப்படி சொல்றீங்கனு? கேட்கிறார். அப்போ சண்முகம் ஊருக்குள்ள கண்ணம்மாவையும், பாண்டியையும் வச்சு எல்லாரும் தப்பா பேசுவதைப் பற்றி சொல்கிறார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

அப்போ தாமரையும், ஆமா கண்ணம்மா ஊருக்குள்ள அப்படித்தான் பேசிட்டு இருக்காங்க, இதுக்குத்தான் பாண்டிட்ட வச்சுக்காததுனு சொன்னேன்னு சொன்னதும், கண்ணம்மா உடனே கோபமாக அங்கிருந்து சென்று விடுகிறார். பின்பு பாரதி கணபத்தியிடம், என்ன ஊர்ல எல்லாரும் ஒரு மாதிரி பேசுறாங்கனு? கேட்கிறார். அப்போ கணபதி உண்மையை பாரதிட்ட சொல்லாமல் அவரிடம் மழுப்பும் விதத்தில் பேசுகிறார்.

பொங்கலுக்கு இப்படி ஒரு ஜாக்பாட்டா.., துணிவு vs வாரிசு படம் குறித்து திரையரங்கு நிர்வாகம் வெளியிட்ட பதிவு!!!

அப்போ தாமரை ஓடிவந்து நடந்த விஷயத்தை தெளிவாக சொல்கிறார். பாரதி கோவமா பாண்டியை தேடி போகும்போது, பாண்டி போட்டில கலந்துக்கிட்டு விளையாடிக் கொண்டிருக்கிறார். அந்த நேரம் பார்த்து, கண்ணம்மா பாண்டியை தேடி போகும் போது, பாண்டி நண்பர்கள் கண்ணம்மாவிடம் திமிராக அவர்களின் திட்டத்தை பற்றி கூறிக் கொண்டே, கண்ணம்மா வம்பிழுக்கிறார்கள். பாரதியும் இதையெல்லாம் கேட்டு ஆக்ரோஷப்படுகிறார். உடனே கண்ணம்மா, பாண்டியே வந்து என் மேல தப்பு இல்ல என்பதை ஊர் அறிய சொல்வார் எனக் கூறிவிட்டு செல்கிறார்.

பின்பு போட்டியில் பாண்டி வெற்றி பெற்ற திமிரில் என்கூட போட்டி போட யாரும் இல்லையானு? சவால் விடும் போது, கண்ணம்மா அங்கு வந்துநிற்கிறார். உடனே ஊர்க்காரர்கள் அனைவரும் கண்ணம்மாவை மறுபடியும் கேவலமாக பேச ஆரம்பிக்கின்றனர். அப்போ, கண்ணம்மா எல்லார்க்கும் அதிர்ச்சி ஆகுறமாதிரி பாண்டி சொன்னதுலாம் உண்மைதான். ஆனா, பாண்டி ஒரு ஆம்பலயே இல்லனு சொல்றாங்க. இதைக் கேட்ட பாண்டி ஆச்சரியத்தில் மிரண்டு போகிறார். இத்துடன் இன்றைய எபிசோட் நிறைவுக்கு வந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here