ஆறாம் வகுப்புக்கு மேல் பெண் குழந்தைகள் படிக்க தடை., கதறி அழும் சிறுமிகள்., பரபரப்பான அறிவிப்பை வெளியிட்ட ஆப்கானிஸ்தான்!!!

0
ஆறாம் வகுப்புக்கு மேல் பெண் குழந்தைகள் படிக்க தடை., கதறி அழும் சிறுமிகள்., பரபரப்பான அறிவிப்பை வெளியிட்ட ஆப்கானிஸ்தான்!!!

உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் பெண்களின் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சி பொறுப்பேற்றது முதல், பெண்கள் கல்வி பயில பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். அந்த வகையில் பெண் குழந்தைகள் ஆறாம் வகுப்புக்கு மேல் படிக்க தடை விதித்துள்ளனர். இதனால் ஆப்கானிஸ்தானில் ஆண்டுதோறும் டிசம்பர் மாதத்தோடு கல்வியாண்டில் இறுதி தேர்வு நடைபெறுவது வழக்கம்.

அதன்படி ஆறாம் வகுப்பு கல்வி முடித்த ஆயிரக்கணக்கான சிறுமிகள் 7 ஆம் வகுப்பு செல்ல முடியவில்லை என கண்ணீர் மல்க தெரிவித்து வருகின்றனர். தலிபானின் இந்த நடவடிக்கை பல்வேறு துறை சார்ந்த சமூக ஆர்வலர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அந்நாட்டு கல்வித்துறை கூறுகையில், “மதரசாக்கள் போன்ற மத பள்ளிகளில் பெண்கள் படிக்க தடையில்லை.” என விளக்கமளித்துள்ளது.

Enewz Tamil WhatsApp Channel 

மாட்டிக்கிட்டாரு ஒருத்தரு.. இளம் பெண்ணுடன் விஷால்.. வைரலாகும் புகைப்படம் உள்ளே!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here