‘பெண்கள் கண்ணியத்திற்கு குறைவாக நான் பேசவில்லை’ – தேர்தல் ஆணையத்திற்கு ஆ.ராசா விளக்கம்!!

0

தமிழக முதல்வர் குறித்த சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்த ஆ.ராசாவிடம் அவரது கருத்து குறித்து தேர்தல் ஆணையம் இன்று மாலை 6 மணிக்குள் விளக்கமளிக்க வேண்டும் என்று நோட்டிஸ் அனுப்பியது. தற்போது அதற்கு திமுகவின் ஆ.ராசா விளக்கமளித்துள்ளார்.

ஆ.ராசா:

சில தினங்களுக்கும் முன்பு திமுகவின் ஆ.ராசா தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குறித்து சற்று சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இதனை கண்டித்து அதிமுகவினர் போராட்டம் நடத்தினர். பின்பு இதுகுறித்து தமிழக முதல்வர் கண்கலங்கினார் என்பதை அறிந்த ஆ.ராசா தனது மனமார்ந்த மன்னிப்பும் கேட்டுள்ளார். மேலும் இவரது கருத்து குறித்து தேர்தல் ஆணையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதுகுறித்து தேர்தல் ஆணையம் கூறியதாவது, ஆ.ராசா பேசிய சர்ச்சைக்குரிய கருத்து குறித்து அவர் இன்று மாலை 6 மணிக்குள் விளக்கமளிக்க வேண்டும் என்று நோட்டிஸ் அனுப்பியது. தற்போது அதனை விளக்கும் வகையில் ஆ.ராசா தனது கருத்தை தெரிவித்துள்ளார். அதன்படி தேர்தல் ஆணையத்திடம் அவர் கூறியதாவது, முதல்வரை விமர்சித்த விவகாரத்தில் என் மீது திட்டமிட்டு புகார் அளிக்கப்பட்டுள்ளது.

a.rasa

தேர்தல் அதிகாரிகளை மிரட்டிய வழக்கு – கடம்பூர் ராஜுவிற்கு நிபந்தனையற்ற முன்ஜாமீன்!!

மேலும் தேர்தல் நடத்தை விதிமுறையை நான் மீறவில்லை. அதேநேரத்தில் நான் பெண்கள் கண்ணியத்திற்கு குறைவாக நான் பேசவில்லை. நியாயமான முறையில் என் மீது விசாரணை நடத்தப்பட்டால் என் மீதான குற்றச்சாட்டு தவறு என தெரியவரும். என் பேச்சின் விடியோவை முழுவதுமாக பார்த்தல் தற்போதைய குற்றச்சாட்டு அரசியல் ரீதியாக திரிக்கப்பட்டது என்று தெரியவரும். முதல்வர் கண்கலங்கியதை அறிந்து நான் மன்னிப்பும் கூறியுள்ளேன் என்று ஆ.ராசா தேர்தல் ஆணையத்திற்கு விளக்கமளித்துள்ளார். தற்போது தற்காலிகமாக விளக்கம் அளித்த ராசா முழுமையான விளக்கத்திற்கு அவகாசம் கேட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here