இந்தியா மட்டுமல்ல அமெரிக்காவிலும் தீபாவளி பண்டிகைக்கு பொது விடுமுறை? முக்கிய அறிவிப்பு!!!

0
இந்தியா மட்டுமல்ல அமெரிக்காவிலும் தீபாவளி பண்டிகைக்கு பொது விடுமுறை? முக்கிய அறிவிப்பு!!!
இந்தியா மட்டுமல்ல அமெரிக்காவிலும் தீபாவளி பண்டிகைக்கு பொது விடுமுறை? முக்கிய அறிவிப்பு!!!

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை ஆண்டுதோறும் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியா மட்டுமல்லாமல் அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களும் இந்த பண்டிகையை சிறப்பித்து வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு அமெரிக்காவில் இந்தியர்கள் அதிகம் வாழும் உட்டா, பென்சில்வேனியா உள்ளிட்ட மாகாணங்களில் தீபாவளி அன்று பொது விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இந்நிலையில் தீபாவளி பண்டிகையை அமெரிக்காவில் 12வது கூட்டாட்சி பொது விடுமுறையாக அறிவிக்கும் மசோதாவை அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் கிரேஸ் மெங் தாக்கல் செய்துள்ளார். இதைத் தொடர்ந்து பேசிய அவர், ” தீபாவளி பண்டிகை அன்று விடுமுறையாக அறிவிக்கும் மசோதாவை தாக்கல் செய்வதில் பெருமை அடைகிறேன். இதற்கு ஆதரவு தெரிவித்த அரசு பிரதிநிதி, வழக்கறிஞர்களுக்கு நன்றி.” எனவும் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here