மாணவர்கள் கவனத்திற்கு.., 10, 11-ம் வகுப்பு துணை தேர்வு.., விண்ணப்பிக்க இன்று தான் கடைசி நாள்!!

0
மாணவர்கள் கவனத்திற்கு.., 10, 11-ம் வகுப்பு துணை தேர்வு.., விண்ணப்பிக்க இன்று தான் கடைசி நாள்!!
மாணவர்கள் கவனத்திற்கு.., 10, 11-ம் வகுப்பு துணை தேர்வு.., விண்ணப்பிக்க இன்று தான் கடைசி நாள்!!

தமிழகத்தில் கடந்த மார்ச், ஏப்ரல் மாதம் நடைபெற்ற 10 ஆம், 11 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியானது. இதில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 90.94% மாணவர்களும், 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 91.39% மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதில் ஒரு சில மாணவர்கள் 10 ஆம், 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வி அடைந்துள்ளனர். இவர்களுக்கான துணைத் தேர்வு குறித்த விவரம் சமீபத்தில் வெளியானது. அதன்படி பொதுத்தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்கள் துணைத் தேர்வுக்கு மே 23 ஆம் தேதி முதல் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது.

இந்தியா மட்டுமல்ல அமெரிக்காவிலும் தீபாவளி பண்டிகைக்கு பொது விடுமுறை? முக்கிய அறிவிப்பு!!!

இந்நிலையில் இன்றுடன் துணைத் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் முடிவடைகிறது. மேலும் இதில் விண்ணப்பிக்க தவறியவர் வரும் மே 30, 31ம் தேதிகளில் தட்கல் முறையில் விண்ணப்பிக்கலாம். இதற்கு கூடுதல் கட்டணமாக 10 ஆம் வகுப்பு தேர்வுக்கு ரூ.500, 11 ஆம் வகுப்பு தேர்வுக்கு ரூ.1000 விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும் என தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here