தமிழில் முன்னணி நடிகையாக உள்ள ஸ்ருதிஹாசன், இவரின் பன்முக திறமையை நாம் அனைவரும் பார்த்திருப்போம். இந்நிலையில் இவர் மீண்டும் தொகுப்பாளராக தனது முத்திரையை பதிக்க உள்ளார்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருந்தவர் கமல்ஹாசனின் மகள் தான் ஸ்ருதிஹாசன். இவரது படங்கள் வசூலில் சாதனை படைத்து வந்த நிலையில் இவர் கைவசம் நிறைய படங்கள் இருந்தன. இவர் நடிப்பில் தமிழில் வெளிவந்த அனைத்து படங்களும் வெற்றி கண்ட நிலையில் இவர் தமிழில் இன்னும் பல படங்கள் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இவரோ தனது கவனத்தை மற்ற மொழி பக்கம் திருப்பினார். அங்கும் இவரது படங்கள் வெற்றி அடையவே தமிழ் சினிமாவை முற்றிலும் மறந்து விட்டார்.
மேலும் இவர் தனது அப்பாவை போல பல்வேறு திறமைகளுக்கு சொந்தக்காரர்தான். பாட்டு,நடனம்,நடிப்பு என பல்வேறு திறமையை வெளிப்படுத்தியவர். தனது சொந்த குரலில் பாடல்களும் பாடியுள்ளார். மேலும் கமல்ஹாசன் நடிப்பதை தாண்டியும் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் தொகுப்பாளராக அறிமுகமாகி அதில் வெற்றியும் கண்டார். கமல்ஹாசன் தொகுத்து வழங்குவதை பார்ப்பதற்காகவே தனி ரசிகர்கள் கூட்டமும் உள்ளது. தற்போது தனது அப்பாவைப் போலவே தானும் ஒரு வெற்றி தொகுப்பாளராக மாற வேண்டும் என்று களமிறங்கியுள்ளார் சுருதிஹாசன்.
சுருதிஹாசன் ஏற்கனவே சன் டிவியில் ஹலோ சகோ எனும் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இந்நிலையில் இவருக்கு தெலுங்கில் அமேசான் தளத்தில் பிரபல நிகழ்ச்சி ஒன்றைத் தொகுத்து வழங்கும் வாய்ப்பு கிடைத்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ தகவல்கள் கூடிய சீக்கிரத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Facebook => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!