ஹாரி பாட்டர் மற்றும் க்ரிஃபிண்டரைப் பற்றிய உங்கள் நினைவுகளை மீண்டும் தூண்டும் விதமாக; அமெரிக்காவில் ஹாரிபாட்டர் என்ற பெயரில் ஹாரிபாட்டர் படத்தில் வரக்கூடிய அனைத்து பொருட்களை வைத்து ஒரு கடை திறக்கப்பட உள்ளது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
நியூயார்க்கில் ஹாரிபாட்டர் ஷாப் திறக்கப்பட்ட உள்ளது:
நியூயார்க்கில் உள்ள புதிய ஹாக்வார்ட்ஸ் பாணி ஹாரி பாட்டர் கடை மூன்று அடுக்குகளை கொண்ட; சுமார் 21,000 சதுர அடி (1,950 சதுர மீட்டர்) பரப்பளவில் அமைந்துள்ள சில்லறை விற்பனைக் கடை ஆகும். அங்கு ஹாரி பாட்டர் மற்றும் அருமையான மிருகங்களின் பெரிய உருவங்கள் விற்பனை செய்யப்படுகிறது.
புகழ்பெற்ற ஹாலிவுட் திரைப்படமான “ஹாரி பாட்டர்” ரசிகர்களுக்கு புதிய ஆச்சர்யம் ஒன்று காத்திருக்கிறது. இந்த அடுக்குமாடி கடை வருகின்ற ஜூன் 3ஆம் தேதி திறக்க உள்ளது.
ஹாரி பாட்டரில் வரக்கூடிய காட்சிகளைப் போலவே; ஃபீனிக்ஸ் பறவையின் மாதிரி, ஹாக்வார்ட்ஸ் மாயாஜாலப் பள்ளியின் சீருடைகள், ராட்சத பாம்பு மாதிரி, அந்தரத்தில் பறக்கும் ஹாரிபாட்டர் புத்தகங்கள், டெலிஃபோன் பூத், மந்திரக் கோல்கள், கிரிஃபின் என்றழைக்கப்படும் புராணகாலத்து விலங்கு ஆகிய அனைத்து பொருட்களும் அந்த கடையில் இடம்பெற்றுள்ளன.
Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!