மீண்டும் விஜய் டிவியில் மெகா சங்கமம் – அதுவும் இந்த 2 டாப் சீரியல்களா?? அப்போ ஒரே கொண்டாட்டம் தான்!!

0

விஜய் டிவியில் பாரதி கண்ணம்மா சீரியலும், ராஜா ராணி சீரியலும் நிறுத்தப்பட்ட நிலையில் வரும் திங்களன்று மெகா சங்கமம் ஒளிபரப்பாகவுள்ளது. இதனால் ரசிகர்கள் பலரும் குஷியில் உள்ளனர்.

விஜய் டிவி சீரியல்

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வந்த சீரியல்கள் தான் ராஜா ராணி, பாரதி கண்ணம்மா. கிட்டத்தட்ட இரண்டுமே டப்பிங் சீரியல் தான். ராஜா ராணி சீரியல் என் கணவன் என் தோழன் சீரியலின் டப்பிங். பாரதி கண்ணம்மா சீரியல் கார்த்திகை தீபம் சீரியலின் டப்பிங் ஆகும்.

அனாலும் மக்கள் மத்தியில் சக்கைபோடு போட்டு வருகிறது. ஏனெனில் கதைக்களம் அந்த மாதிரி. பல விறுவிறுப்பான சம்பவங்களுடன் நகர்ந்து வருகிறது. அடுத்தடுத்து என்ன நடக்க போகிறது என்று பலரும் காத்திருந்த வேளையில் இந்த கொரோனாவால் ஊரடங்கு போடப்பட்டு ஷூட்டிங் தடைபட்டது.

இதனால் காட்சிகள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மேலும் சோகமான செய்தி என்னெவென்றால்இந்த இரண்டு சீரியல்களை திங்கள் முதல் வெளியாகாது. அதாவது பழைய எபிசோடுகள் மட்டுமே வெளியாகும்.

மேலும் இதில் மகிழ்ச்சியளிக்க கூடிய விஷயம் என்னெவென்றால் ராஜா ராணி பாரதி கண்ணம்மா மெகா சங்கமம் திங்கள்கிழமையில் வெளியாகவுள்ளது. இதனை கேட்ட ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here