விஜய் டிவியில் பாரதி கண்ணம்மா சீரியலில் நடிக்கும் ரோஷினி மீண்டும் ஒரு சாதனையை படைத்துள்ளார். அதாவது டாப் 5 சின்னத்திரை நடிகைகளில் கண்ணம்மா ரோஷினி தான் முதல் இடம். இதனால் அவரது ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
பாரதி கண்ணம்மா
பாரதி கண்ணம்மா சீரியல் பாரதியும் கண்ணம்மாவும் 8 வருடங்களுக்கு பிறகு பார்த்து கொள்வதால் பல பிரச்சனைகள் மற்றும் ட்விஸ்டுகள் வெளியாகியுள்ளது. வெண்பா இவர்கள் யாரும் சேர்ந்து விடக்கூடாது என்று விடாப்பிடியாக உள்ளார். இந்த பக்கம் சௌந்தர்யா தன் மருமகளை வீட்டிற்கு அழைத்து வர வேண்டும் என்று பல வேலைகளை செய்து வருகிறார். இப்படி பல திருப்பங்களுடன் இருப்பதால் தான் பாரதி கண்ணம்மா சீரியலுக்கு மக்கள் மத்தியில் மவுசு அதிகரிக்கிறது.
அதிலும் கண்ணம்மாவாக நடிக்கும் ரோஷினிக்கு நாளுக்கு நாள் ரசிகர்கள் கூட்டம் ஏராளமாகி வருகிறது. கண்ணம்மா போல தைரியமா இருக்கணும், போராடனும் என்று அவரை முன்னுதாரணமாக நினைத்தும் வாழ்ந்து வருகின்றனர். இப்படி கண்ணம்மாவுக்கு ஏகப்பட்ட பாசிட்டிவ் கமெண்ட்ஸ் வந்துகொண்டுள்ளது.
இந்நிலையில் சமீபத்தில் எடுக்கப்பட்ட சர்வேயில் சின்னத்திரை நாடகத்தில் அதிகம் விருப்பப்படும் நாயகிகள் பட்டியல் வெளியாகியுள்ளது. அதில் கண்ணம்மா தான் முதல் இடம். அடுத்த இடம் பாண்டியன் ஸ்டோர்ஸ் காவியா. மூன்றாவது இடம் ரோஜா சீரியல் நடிகை பிரியங்கா. இந்த பட்டியல் இணையத்தில் வைரலாகி வருகிறது. கண்ணம்மாவிற்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Very sad news
We have lost a great actor
May his soul rest in peace
Condiolences to the bereaved family