இந்தியாவில் மோசமடையும் கொரோனா – 16 கோடியை தாண்டிய பாதிப்பு!!

0

90% இந்தியாவில் கொரோனா பாசிட்டிவிட்டி சதவிகிதம் 5%க்கும் அதிகமாக உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

16 கோடியை தாண்டிய கொரோனா:

உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த நிலையில் இந்தியாவில் தற்போது நகரங்களில் இருந்து கிராமங்களுக்கு கொரோனா வேகமாக பரவ தொடங்கி உள்ளது.

கிராமங்களுக்கு கொரோனா  வேகமாக பரவுவதால் கிட்டத்தட்ட 90% இந்தியாவில் கொரோனா பாசிட்டிவிட்டி சதவிகிதம் அதிகரித்து வருகிறது. அதன்படி இந்தியாவில் உள்ள 734 மாவட்டங்களில் 640 மாவட்டங்களில் பாசிட்டிவிட்டி ரேட் 5%க்கும் அதிகமாக உள்ளது. அதாவது 100 பேரை சோதனை செய்தால் 5 பேருக்கு கொரோனா வருகிறது. இது மிக அதிகம் ஆகும்.

இரண்டாம் அலை கொரோனா தாக்குதல் நகரங்களுக்கு இணையாக கிராமங்களிலும் மோசமாக பரவி உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 10%க்கும் அதிகமாக பாசிட்டிவிட்டி கொண்ட அல்லது 60%க்கும் அதிகமாக மருத்துவமனை படுக்கைகள் நிரம்பிய மாவட்டங்களை பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ், தனி அதிகாரி நியமித்து கண்காணிக்க வேண்டும்.

இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16 கோடியை தாண்டி உள்ளது. இதன்படி உலகம் முழுவதும் தற்போது 1610,80,581 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here