ஆக்சிசனை தொடர்ந்து மருத்துவர்கள், செவிலியர்கள் பற்றாக்குறை – கோவையில் ஏற்பட்டிருக்கும் அவல நிலை!!

0

உலகம் முழுவதும் கொரோனா நோய்த்தொற்றின் கோரத்தாண்டவத்தினால் பல தரப்பு மக்கள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டு உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது கோவையில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

கோவை:

தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று தீவிரமெடுத்து வருவதால் தற்போது ஊரடங்கு நடவடிக்கை அமலில் இருந்து வருகிறது. அதேபோல் ஊரடங்கின் பொழுது சில துறைகளுக்கு மட்டுமே தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. இருந்தும் தற்போது கொரோனா பாதிப்பு உச்சத்தை அடைந்து வருகிறது. தற்போது தமிழகத்தில் ஆக்சிஜன், படுக்கை வசதி ஆகியவற்றிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

இதனால் கொரோனா நோயாளிகள் மருத்துவமனைகளில் நீண்ட நேரம் காத்து வருகின்றனர். மேலும் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும் தாமதம் ஏற்பட்டு வருகிறது. இதனால் மக்கள் கடுமையான வேதனைக்கு உள்ளாகி வருகின்றனர். தற்போது மக்களை மேலும் அதிர்ச்சி அடைய செய்யும் வகையில் கோவையில் ஓர் சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதன்படி தற்போது கோவை அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் 8 வாரங்களுக்கு முழு ஊரடங்கு??ஐ.சி.எம்.ஆர் திடுக் அறிக்கை!!

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

கோவை அந்த மருத்துவமனையில் 900க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது அங்கு 500 மருத்துவர்கள் மற்றும் 900 செவிலியர்கள் தேவைப்படும் நிலையில் 250 மருத்துவர்கள் மற்றும் 300 செவிலியர்கள் மட்டுமே பணி புரிந்து வருகின்றனர். மேலும் முதுநிலை மருத்துவ மாணவர்கள் 200 பேர் பணியாற்றி வருகின்றனர். அதேபோல் இஎஸ்ஐ மருத்துவமனையிலும் 80 மருத்துவர்கள் மற்றும் 125 முதுநிலை மருத்துவ மாணவர்கள் மட்டுமே பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நெருக்கடியான நேரத்தில் தற்போது மருத்துவர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் மருத்துவமனைகள் சிகிச்சை அளிக்க முடியாமல் திணறி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here