தமிழில் புதிய கல்வி கொள்கை – பலத்த எதிர்ப்பிற்கு பின்பு வெளியீடு!!

0

மத்திய கல்வி அமைச்சகம் கடந்த சில தினங்களுக்கு முன்பு புதிய கல்வி கொள்கை பற்றிய அறிவிப்பை வெளியிட்டது. அதில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டது. இதனால் பல கடுமையான கண்டனங்கள் எழுந்தது.

புதிய கல்வி கொள்கை:

மத்திய அரசு நாட்டின் கல்வித்திறனை அதிகரிக்க புதிய கல்விக்கொள்கை அமல்படுத்தப்படும் என்று தெரிவித்தது. இந்தியாவில் முன்னதாக கடந்த 1986ம் ஆண்டு வகுக்கப்பட்ட கல்வி கொள்கை தான் சுமார் 34 ஆண்டு காலமாக நடைமுறையில் இருந்தது. ஆனால் மாணவர்களின் நலன் மற்றும் அறிவு திறன் குறித்து மத்திய அரசு 21ம் நூற்றாண்டிற்கான புதிய கல்வி கொள்கை அமல்படுத்தப்படும் என்று தெரிவித்தது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு இந்த புதிய கல்வி கொள்கை பற்றிய அறிவிப்பு ஒன்று வெளியானது. அதில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டது. இதனால் பல்வேறு எதிர்ப்பு எழுந்தது. மேலும் தமிழகத்தில் பலர் தங்களது கண்டனத்தை தெரிவித்து வந்தனர். அதுமட்டுமல்லாமல் மாநிலங்களின் கல்வி உரிமையை பறித்து உள்ளனர் என்று சிலர் கூறினார்.

தமிழகத்தில் இந்த 7 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு – வானிலை அறிக்கை!!

மேலும் அனைத்து மாநிலங்களுக்கும் இடையே ஏற்றத்தாழ்வை உண்டாக்கும் வகையில் இது உள்ளது என்றும் கண்டனத்தை தெரிவித்தனர். இந்நிலையில் தற்போது புதிய கல்வி கொள்கையை தற்போது மத்திய அரசு தமிழில் வெளியிட்டுள்ளது. பல கண்டனங்கள் மற்றும் எதிர்ப்புகள் வெளிவந்த நிலையில் தற்போது தமிழில் புதிய கல்வி கொள்கை வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here