‘கண்டிப்பாக ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படமாட்டாது’ – திமுக தலைவர் ஸ்டாலின் உறுதி!!

0

நாட்டில் தற்போது கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்படும் ஆக்சிஜன் மிக கடுமையான அளவில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறப்பது குறித்து அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது.

ஸ்டெர்லைட் ஆலை:

தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை காட்டுத்தீயாக பரவி வருகிறது. இதன் காரணமாக அனைத்து பகுதிகளிலும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மற்றும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் சில தினங்களாக நாட்டில் கொரோனா நோயாளிகளுக்கு தேவைப்படும் ஆக்சிஜனுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் அனைத்து மாநிலங்களிலும் நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்நிலையில் தமிழகத்தில் ஏற்பட்ட பல பிரச்சனைகள் காரணமாக மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையில் அதிகபட்ச ஆக்சிஜன் தயாரிக்கலாம் என்று கூறி அதனை திறக்க அனுமதி வேண்டும் என்று ஸ்டெர்லைட் நிறுவனம் நீதிமன்றத்தில் மனு வழங்கியது. இதற்கு தமிழகத்தில் பலர் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை திறப்பது குறித்து தமிழகத்தில் அனைத்து கட்சி கூட்டம் இன்று(ஏப்ரல் 26) நடைபெற்றது. அதில் திமுக உட்பட பல கட்சிகள் ஸ்டெர்லைட் ஆலையை ஆக்சிஜன் உற்பத்திக்கு மட்டும் திறக்க ஆதரவு தெரிவித்தனர்.

தமிழகத்தில் இந்த 7 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு – வானிலை அறிக்கை!!

இந்த கூட்டத்தில் திமுக கட்சி சார்பாக எம்பி கனிமொழி மற்றும் ஆர்.எஸ் பாரதி ஆகியோர் கலந்துகொண்டனர். தற்போது இதுகுறித்து திமுக தலைவர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதன்படி அவர் கூறியதாவது, ‘திமுக ஆட்சி அமைந்த பிறகும் எந்த  சூழலிலும் நச்சு ஆலை ஸ்டெர்லைட் திறக்கப்படாது என்பதை உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். ஸ்டெர்லைட் ஆலையை திறக்கும் முடிவு தற்காலிகமானது தான்’ என்றும் அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here