பாலா நீங்களும் மாலதீவுல இருக்கீங்க, ஷிவானியும் அங்க தான் இருகாங்க – என்னடா நடக்குது அங்க!!

0

பிக் பாஸில் காதலித்த பாலாஜி முருகதாஸ் மற்றும் ஷிவானி இருவரும் மாலத்தீவுகளுக்கு விடுமுறைக்கு சென்றுள்ளனர். இதனை அடுத்து இருவருக்கும் மீண்டும் காதல் மலர வாய்ப்புகள் உள்ளது போலயே என்று நெட்டிசன்கள் யோசித்து வருகின்றனர்.

பிக் பாஸ் காதல்

விஜய் தொலைக்காட்சியில் ஒவ்வொரு ஆண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது. இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக சற்று தாமதமாக தான் பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்தது. இதனை அடுத்து இதில் பலர் பங்கு கொண்டனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதில் இருவர் தான் ஷிவானி நாராயணன் மற்றும் பாலாஜி முருகதாஸ். பாலாஜி முருகதாஸ் பல விளம்பர படங்களில் நடித்துள்ளார். அவர் மாடலிங் துறையில் இருந்த வந்தவரும் ஆவார். ஷிவானி நாராயணன் பல சீரியல்களில் நடித்துள்ளனர்.

இதனை அடுத்து இருவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் இருவரும் நல்ல நண்பர்களாக இருந்து வந்தனர். இதனை அடுத்து சில நாட்களில் ஷிவானி பாலாஜியை காதலித்ததாக வதந்தி பிக் பாஸ் வீட்டிற்குள் பரவியது. கூடுதலாக, ஷிவானி மற்றும் பாலாஜி இருவர் ஒன்றாக இருப்பதனை பார்த்து கேபி கோபம் அடைந்தார்.

ஆனால், ஒரு சில நாட்களில் பாலாஜி ஷிவானியை தான் காதலிக்கவில்லை என்றும் அப்படி ஏதுனும் தோன்றினால் அனைவருக்கும் தெரியப்படுத்துவதாகவும் தெரிவித்தார். இதன் பிறகு ஷிவானியின் தாய் வந்த போது அவர் ஷிவானி பாலாஜியின் பின் சுற்றுவதை மிகவும் கடுமையாக கண்டித்தார்.

#INDvsENG ஒரு நாள் போட்டி – சதத்தை தவறவிட்ட தவான்!இந்தியா 197/4!!

அதன் பிறகு ஷிவானி நன்றாக அனைத்து போட்டிகளிலும் பங்கேற்று விளையாடியது வேறு கதை. தற்போது ஷிவானி மாலத்தீவிற்கு சென்றுள்ளார். அதே போல் பாலாஜியும் மாலத்தீவிற்கு தான் சென்றுள்ளார். இதனால் நெட்டிசன்கள் இருவரும் மீண்டும் தங்களது காதலை புதுப்பிக்க இந்த ட்ரிப்பை பயன்படுத்துகின்றனரோ என்று சந்தேகம் அடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here