‘கோவை மெட்ரோ முதல் துறை மேம்பாடுகள் நிதி ஒதுக்கீடு வரை’ – இடைக்கால பட்ஜெட் முழு விபரம்!!

0

தமிழகத்தில் தற்போது துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் இந்த ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட் 2021-22 தாக்கல் செய்து வருகிறார். தற்போது அதை பற்றிய Live Updates தகவல்களை காணலாம்.

தமிழக பட்ஜெட்:

தமிழகத்தில் நடப்பாண்டிற்கான பட்ஜெட் தாக்கல் இன்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்று வருகிறது. இதனை தமிழகத்தின் துணை முதல்வர் மற்றும் நிதி அமைச்சரான பன்னீர் செல்வம் தாக்கல் செய்து வருகிறார். இவர் தாக்கல் செய்யும் 10வது பட்ஜெட் இது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடைபெறும் என்பதால் இந்த பட்ஜெட்டில் மக்களை கவரும் வகையில் பல திட்டங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது கூட்டத்தில் இருந்து திமுக.,வினர் வெளிநடப்பு செய்துள்ளனர்.

இடைக்கால பட்ஜெட் 2021-22:

  • கோவை ரயில் மெட்ரோ திட்டத்திற்கு ரூ.6,683 கோடி ஒதுக்கீடு
  • 2 ஆயிரம் மின்சார பேருந்துகள் உட்பட 12,000 பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும்.
  • மாநிலத்தின் மொத்த வரி ரூ.1,35,641 கோடியாக இருக்கும் என்று மதிப்பீடு
  • தமிழகத்தில் வருவாய் பற்றாக்குறை 41,417.30 கோடியாக உயர்வு.
  • 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை கணிப்பொறி பாடம்.
  • தமிழக அரசின் கடன் ரூ.5.70 லட்சம் கோடியாக உயர்வு.
  • தமிழ்நாடு தொழில் முதலீடு கழகத்திற்கு ரூ.300 கோடி ஒதுக்கீடு.
  • தமிழக காவல்துறைக்கு ரூ.5,967 கோடி ஒதுக்கீடு.
  • வேளாண்துறைக்கு ரூ.11,982 கோடி ஒதுக்கீடு.
  • உயர்கல்வித்தொகைக்கு ரூ.5,478 கோடி நிதி ஒதுக்கீடு.
  • அம்மா கிளினிக் திட்டத்திற்கு ரூ.144 கோடி ஒதுக்கீடு.
  • பயிர் கடன் தள்ளுபடிக்காக ரூ.500 கோடி ஒதுக்கீடு.
  • விவசாயிகள் பயிர்காப்பீடு திட்டத்திற்காக ரூ.1,738.81 கோடி ஒதுக்கீடு.
  • நீதி நிர்வாகத்திற்கு ரூ.1,437 கோடி ஒதுக்கீடு.
  • காப்பீடு திட்டத்திற்கான நிதியை அரசே ஏற்கும்.
  • ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.2,350 கோடி ஒதுக்கீடு.
  • பிரதமரின் நகர்ப்புற வசதி வீட்டு திட்டத்திற்கு ரூ.3,700 கோடி ஒதுக்கீடு.
  • சுகாதாரத்துறைக்கு ரூ.19,420 கோடி ஒதுக்கீடு.
  • நகர்ப்புற வடிகால் திட்டம் ரூ.1,450 கோடி ஒதுக்கீடு.
  • மூலதன செலவு 14.41 சதவீதமாக உயர்வு.
  • சென்னை மாநகரை தனித்தன்மை வாய்ந்ததாக மாற்றுவதற்கு ரூ.3,140 கோடி ஒதுக்கீடு.
  • மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக RIGHTS திட்டம்.
  • கிராமப்புற வீட்டு வசதி திட்டத்திற்கு ரூ.3,518 கோடி ஒதுக்கீடு.
  • நெடுஞ்சாலை துறைக்கு ரூ.18,750 கோடி ஒதுக்கீடு.
  • ஊரக சாலை மேம்பாட்டு திட்டத்திற்கு ரூ.440 கோடி ஒதுக்கீடு.
  • அரசு பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோருக்கு ரூ.1,02,049 கோடி ஒதுக்கீடு.
  • ஊரக வளர்ச்சி திட்டத்திற்கு ரூ.22,218.58 கோடி ஒதுக்கீடு.
  • மீன்வள துறைக்கு ரூ.580 கோடி ஒதுக்கீடு..
  • மதிய உணவு திட்டத்திற்கு ரூ.1,953 கோடி ஒதுக்கீடு.
  • புதிய மருத்துவ கல்லூரி திட்டத்திற்கு ரூ.2,470 கோடி ஒதுக்கீடு.
  • கைத்தறி துறைக்கு ரூ.1,224 கோடி ஒதுக்கீடு.
  • நீர்ப்பாசன துறைக்கு ரூ.6,453 கோடி ஒதுக்கீடு.
  • பழங்குடியினர் நலன் திட்டத்திற்கு ரூ.1,276 கோடி ஒதுக்கீடு.
  • ஆதிதிராவிடர் நலன் திட்டத்திற்கு ரூ.13,967 கோடி ஒதுக்கீடு.
  • மாற்றுத்திறனாளி நலன் திட்டத்திற்கு ரூ.688 கோடி ஒதுக்கீடு.
  • 71,766 பேருக்கு வேலை வழங்கும் திட்டம் ரூ.39,941 கோடியில் 62 முதலீடுகளுக்கு விரைவில் அனுமதி.
  • கொரோனா காலத்தில் மாநில போக்குவரத்து கழகத்திற்கு ரூ.3,717.36 கோடி இழப்பீடு.
  • 2021-22ம் கல்வியாண்டில் கூடுதல் 1650 மருத்துவ படிப்பு இடங்கள் வரும் என்று எதிர்பார்ப்பு.
  • எதிர்பார்த்ததை விட 17.64% வரி வருவாய் குறைவு.
  • இளைஞர் நலன் மற்றும் விளையாட்டிற்கு ரூ.229 கோடி ஒதுக்கீடு.
  • 2022-23ம் ஆண்டில் வருவாய் பற்றாக்குறை ரூ.33,510 கோடியாக குறையும் என கணக்கீடு.
  • 2023-24ம் ஆண்டில் வருவாய் பற்றாக்குறை ரூ.24,483 கோடியாக குறையும் என கணக்கீடு.
  • 2021-22ம் ஆண்டில் ரூ.84,686.85 கோடி கடன் வாங்க திட்டம்.
  • நிலுவையில் உள்ள மொத்த கடன் ரூ.5,70,108.29 கோடி.
  • டொராண்டோ பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கைக்கு அனுமதி.
  • பள்ளிக்கல்வித்துறை மேம்பாட்டுக்கு ரூ.34,181 கோடி ஒதுக்கீடு.
  • கொரோனா தொற்று மீட்டெடுப்பு நடவடிக்கைக்காக ரூ.13,352 கோடி அரசு செலவிட்டது.
  • குடிநீர் திட்டத்திற்கு ரூ.3,016 கோடி ஒதுக்கீடு.
  • தமிழக காவல்துறையை நவீனமாக்க ரூ.100 கோடி ஒதுக்கீடு.
  • காவேரி-தெற்கு வெள்ளாறு இணைப்பு திட்டத்திற்கு ரூ.6,941 கோடி ஒதுக்கீடு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here