நந்திகிராம் தொகுதியிலிருந்து போட்டியிடுவேன் – மம்தா பானர்ஜீ அறிவிப்பு!!

0

தமிழகம் போலவே மேற்கு வங்கத்திலும் சட்டமன்ற தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில் அங்கு தேர்தல் பணிகள் சூடுபிடித்துள்ளது. அதில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜீ தான் நந்திகிராம் தொகுதியில் போட்டியிடப்போவதாக அறிவித்திருக்கிறார்.

மேற்குவங்க தேர்தல்:

தமிழகத்தை போலவே அஸ்ஸாம், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களிலும் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடத்தப்படவுள்ளது. இதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் நிலையில் மேற்குவங்க முதல்வரும் திரிணாமுல் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜீ தனது பதவியை தக்க வைத்துக்கொள்ள பெரும் முயற்சிகள் எடுத்து வருகிறார். ஏற்கனவே அவரது கட்சியிலிருந்து MLA க்கள் பலரும் ராஜினாமா செய்து வருவதை தொடர்ந்து அவருக்கு இந்த தேர்தலில் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் ஆட்சியை பிடிக்க பாஜகவும் பெரும் முயற்சிகளை எடுத்து வருகிறது.

8 வயதில் 13 கிமீ கடந்து இடைநில்லா ஓட்டம் – சேலம் சிறுமி உலக சாதனை!!

இந்நிலையில் திரிணாமுல் கட்சியின் மூத்த தலைவரான சுவேந்தி அதிகாரி தனது அமைச்சர் மற்றும் MLA பதவியை ராஜினாமா செய்துவிட்டு அமித்ஷா முன்னிலையில் பாஜக.,வில் இணைந்து விட்டார். இந்நிலையில் தனது தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ள மம்தா நந்திகிராமில் நடைபெற்ற பிரச்சார கூடத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், தான் நந்தி கிராமிலிருந்து போட்டியிடப்போவதாகவும், முடிந்தால் பவானிப்பூரிலும் சேர்த்து இரு தொகுதியிலிருந்தும் போட்டியிடுவேன் என்றும் தெரிவித்தார்.

நாடு திரும்பியவுடன் எதிர்க்கட்சி தலைவர் அதிரடி கைது – ரஷியாவில் பரபரப்பு!!

சென்ற வருடம் பாஜக.,வில் இணைந்த சுவேந்தி, கடந்த 2016ம் ஆண்டில் நந்திகிராம் தொகுதியிலிருந்துதான் போட்டியிட்டு வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here