தமிழ்நாடு அரசுப்பணியில் தேர்வாணையம் சார்பில் 2021ம் ஆண்டிற்கான தேர்வுகள் அட்டவணை வெளியிடப்பட்டு உள்ளது. கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு நடைபெற இருந்த குரூப் 1, 2, 2a மற்றும் குரூப் 4, விஏஓ உட்பட பல போட்டித் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் அடுத்த ஆண்டிற்கான அட்டவணை குறித்த விபரங்கள் வெளியாகி உள்ளது.
TNPSC தேர்வுகள்:
கொரோனா பரவல் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவின் காரணமாக அரசுக்கு ஏற்பட்ட வருவாய் இழப்பை சரிசெய்ய அரசுத்துறைகளில் புதிய பணியிடங்களை உருவாக்க தடை விதிக்கப்பட்டது. மாற்றாக ஏற்கனவே உள்ள காலிப்பணியிடங்கள் மட்டும் நிரப்பப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் 2021ம் ஆண்டுக்கான TNPSC தேர்வு அட்டவணை வெளியாகி உள்ளதால், தேர்வர்களுக்கு வயது வரம்பில் தளர்வு, புதிய காலிப்பணியிடங்கள் குறித்து தேர்வு சமயத்தில் TNPSC அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட அறிக்கையின்படி, 2021ம் ஆண்டு ஜனவரி 3ம் தேதி குரூப் 1 தேர்வும், மே மாதத்தில் குரூப் 2 மற்றும் குரூப் 2a தேர்வுகளும், ஜூலை மாதத்தில் குரூப் 3 தேர்வுகளும், செப்டம்பரில் குரூப் 4 மற்றும் VAO தேர்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. தேர்வர்கள் கீழே கொடுக்கப்பட்ட லிங்கை கிளிக் செய்து முழு தேர்வு அட்டவணையை டவுன்லோட் செய்து கொள்ளலாம்.