Saturday, June 15, 2024

ரயில்களில் பெண்கள் & சிறார்களுக்கான நேரக்கட்டுப்பாடு நீக்கம் – தெற்கு ரயில்வே அறிவிப்பு!!

Must Read

பெண்கள் மற்றும் சிறார்களுக்கு ரயில்களில் பயணம் செய்ய விதிக்கப்பட்டிருந்த நேரக்கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ஒரு பகுதியாக கூட்ட நெரிசல் இல்லாத நேரத்தில் மட்டும் ரயில்களில் பயணிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில்வே கட்டுப்பாடுகள்:

கொரோனா பரவல் அச்சம் காரணமாக நாட்டில் பொது போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டது. கொரோனா தொற்று காரணமாக இந்த உத்தரவு தொடர்ச்சியாக பின்பற்றப்பட்டு வந்தது. பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டு 7 முதல் 8 மாதங்கள் முடிவடைந்த நிலையில், மக்கள் அதிகமாக பயன்படுத்தும் பொது போக்குவரத்தான ரயில்களும் இயக்கப்பட்டன.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு தான் ரயில்கள் இயக்கப்பட்டன. அதில் ஒரு பகுதியாக, பெண்கள் மற்றும் சிறார்களுக்கு நேரக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. அதே போல் கூட்ட நெரிசல் இல்லாத நேரங்களில் பெண்கள் பயணிக்கலாம் என்றும் குறிப்பிட்டு இருந்தது. சென்னையில் கொரோனா பரவல் அச்சம் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த புறநகர் மின்சார ரயில்களில் இனி பெண்கள் மற்றும் சிறார்கள் நேரக்கட்டுப்பாடு இன்றி பயணிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

‘அம்மா மினி கிளினிக் திட்டம்’ – முதல்வர் இன்று துவக்கி வைப்பு!!

இன்று முதல் அனைவரும் பயணிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 12 வயதிற்கு உட்பட்ட சிறார்களும் பயணிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது. இத்துடன், சென்னை மாநகரில் இருந்து செங்கல்பட்டு, காஞ்சிபுரம் செல்லும் ரயில்களும் இன்று முதல் இயக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

ரயில் பயணிகளே உஷார்.., இனி இதை செய்தால் அபராதம்.. தெற்கு ரயில்வே எச்சரிக்கை!!

நாடு முழுவதும் பெரும்பாலான மக்கள் தங்களது எளிய பயணங்களுக்கு ரயில் சேவையை அதிகம் விரும்புகின்றனர். ஆனால் விரைவு ரயில்களில் உள்ள முன்பதிவு பெட்டிகளில் அனுமதி இல்லாதவர்கள்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -