தமிழ் சினிமாவில் உலகநாயகன் கமல்ஹாசனுக்கு பிறகு ஒரு கதாபாத்திரத்திற்காக உடலை வருத்தி நடித்து வருபவர் தான் நடிகர் விக்ரம். இவரது நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் கடந்த 2005ம் ஆண்டு வெளிவந்த அந்நியன் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. இப்படத்தில் இவருடன் சேர்ந்து நடிகை சதா, பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள்.
மக்களே உஷார்.. அடுத்த 5 நாட்கள் வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு .. வானிலை மையம் எச்சரிக்கை!!
மேலும் அவரின் சினிமா கேரியரில் தவிர்க்க முடியாத படங்களின் லிஸ்டில் இப்படமும் இடம்பெறும். அதுமட்டுமின்றி ஆக்சன் மற்றும் காதல் காட்சிகளுக்கு ஏற்ப ஹரிஸ் ஜெயராஜின் பின்னணி இசையும் ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்து சென்றது. இந்நிலையில் இப்படம் வெளியாகி 19 வருடங்கள் நிறைவு பெறுகிறது. இதை விக்ரம் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.