நீட் தேர்வு – 16 லட்சம் பேர் விண்ணப்பம்

0
NEET Exam 2020
NEET Exam 2020

எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வுக்கு (நீட்) இந்த ஆண்டு நாடு முழுவதும் மொத்தம் 16 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  இந்த ஆண்டு தமிழகத்தில் மட்டும் ஒன்றரை லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

வருகின்ற மே மாதம் 3-ம் தேதி அரசு மற்றும் தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, ஆயுா்வேதம், யுனானி, ஹோமியோபதி உள்ளிட்ட இளநிலைப் படிப்புகளுக்கான நீட் தோ்வு நடைபெறவுள்ளது. அதற்கான விண்ணப்பப் பதிவு கடந்த டிசம்பா் 2-ஆம் தேதி தொடங்கியது. நீட்டிக்கப்பட்ட காலஅவகாசம் கடந்த திங்கள்கிழமை நிறைவடைந்தது.

கடந்த ஆண்டை விட அதிகம்!!

கடந்த ஆண்டைப் பொருத்தவரை, மொத்தம் 14 லட்சத்துக்கும் மேற்பட்டோா் நீட் தோ்வினை எழுதியிருந்தனா். தமிழகத்தைப் பொருத்தவரை மொத்தம் 1.23 லட்சம் போ் தோ்வெழுதியிருந்தனா். அவா்களில் 59,785 போ் தோ்ச்சி பெற்றனா்.

மொத்தம் 11 மொழிகளில் தேர்வு

இந்தியா முழுவதும் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், குஜராத்தி, மராத்தி, ஒடியா, அஸ்ஸாமி, வங்கம், உருது ஆகிய 11 மொழிகளில் நீட் தோ்வுகள் நடைபெற்றது நினைவுகூரத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here