Monday, May 20, 2024

பா.ஜ ஆட்சிக்கு வந்தால் கொரோனா தடுப்பூசி இலவசம் – அதிரடியான தேர்தல் அறிக்கை!!

Must Read

பீகார் மாநிலத்தில் இன்னும் சிறிது நாட்களில் 3ஆம் கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க அனைத்து தேசிய கட்சிகளும் முனைப்பாக உள்ளன. தற்போது பாரதிய ஜனதா கட்சி சார்பில் மக்களை கவர கவர்ச்சிகரமான தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

பீகார் தேர்தல்:

பீகார் தேர்தல் இன்னும் சிறுது நாட்களில் நடைபெற உள்ளது. இதற்கான தீவிரமான பணிகளில் அனைத்து கட்சிகளும் இறங்கி உள்ளது. குறிப்பாக, பா.ஜ அங்கு ஆட்சியினை பிடித்து விட வேண்டும் என்பதில் மிகவும் உறுதியாக உள்ளது. அதற்கான அனைத்து விதமான பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றது. அதற்கு தற்போது மக்களை கவரும் வண்ணம் கவர்ச்சியான தேர்தல் அறிக்கையினை வெளியிட்டுள்ளது.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

இந்த தேர்தல் அறிக்கை மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ளார். அதில் மக்கள் எதிர்பார்க்கா வண்ணம் பல சிறப்பு திட்டங்கள் கூறப்பட்டுள்ளன. அதில் குறிப்பிடும்படியான சில அதிரடியான திட்டங்களும் கூறப்பட்டுள்ளது.

தேர்தல் அறிக்கையானது:

இந்த தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,

  • கொரோனா தடுப்பூசி மக்களுக்கு இலவசமாக வழங்கப்படும்.
  • பீகாரில் குடிசைகளில் வாழும் மக்களுக்கு 2021 ஆம் ஆண்டிற்குள் புதிதாக வீடுகள் கட்டி தரப்படும்.
  • மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கு இனி ஹிந்தி மொழியிலும் கற்பிக்கப்படும்.
  • கூடுதலாக, பீகாரில் உள்ள ஆசிரியர்கள், சுகாதார பணியாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் அரசு சார்பில் ஏற்படுத்தி தரப்படும்.

இப்படியாக சில அதிரடி வாக்குறுதிகளை பாரதிய ஜனதா கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு போட்டி கொடுக்கும் வண்ணமாக காங்கிரஸ் கட்சி சார்பில் வேளாண் மசோதா ரத்து செய்தல், வயதான பெண்களுக்கு கவுரவமான ஓய்வூதியம், விவசாய கடன் தள்ளுபடி போன்ற வாக்குறுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது, குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

IPL 2024 Playoffs: கொல்கத்தா vs ஹைதராபாத் போட்டியில் மழைக்கு வாய்ப்பா?? வெளியான வானிலை ரிப்போர்ட்!!

IPL தொடரின் 17வது சீசன் இறுதிக்கட்டத்தை எதிர்நோக்கி உள்ளதை நாம் அறிவோம். இந்த நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -