Saturday, April 27, 2024

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 4 கிலோ அரசி மற்றும் ரொக்க பணம் – மாநில அரசு முடிவு!!

Must Read

கொரோனா பொது முடக்கம் காரணமாக அரசுப் பள்ளிகள் மூடப்பட்டு உள்ள நிலையில் மாணவர்களின் நலன் கருதி புதுச்சேரி அரசு சார்பில் அவர்களுக்கு பள்ளிகள் மூலமாக 4 கிலோ அரிசி மற்றும் ரொக்கத் தொகை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பரவல்:

கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு உள்ளதால் இலவச மதிய உணவை நம்பி இருக்கும் ஏழை மாணவர்கள் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக அவதியுற்று வந்தனர். இதனால் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு புதுச்சேரி அரசு புது திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்

புதுச்சேரியின் கல்வித் துறை அறிமுகப்படுத்தி இருக்கும் இந்த திட்டத்தில் மாணவர்களுக்கு நாளை முதல் 4 கிலோ அரிசியும், ஊக்கத்தொகையாக ரொக்கப் பணமும் வழங்கப்பட உள்ளது. வகுப்பு வாரியாக மாணவர்களுக்கு அரசி மற்றும் ரொக்க பணம் மாறுபடுகிறது. இது குறித்து பள்ளிக்கல்வித்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அறிக்கை வெளியீடு:

  • 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு 4 கிலோ அரிசியும், சமைப்பதற்கான செலவின பணமாக 290 ரூபாய் பெற்றுக் கொள்ளலாம்.
  • 6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு 4 கிலோ அரிசியும் சமைப்பதற்கான செலவின பணமாக 390 ரூபாய் பெற்றுக் கொள்ளலாம்.
  • நாளை 1 மற்றும் 2 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொருட்கள் வழங்கப்படும்.
  • 16 ஆம் தேதி 3 மற்றும் 4 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொருட்கள் வழங்கப்படும்.
  • 17 ஆம் தேதி 5 மற்றும் 6 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொருட்கள் வழங்கப்படும்.
  • 18 ஆம் தேதி 7 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொருட்கள் வழங்கப்படும்.

முந்தைய காலாண்டில் படித்த மாணவர்களின் பெற்றோர்கள் ஏதேனும் ஒரு அடையாள அட்டையை காட்டி பெற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

மக்களே உஷார்.. தமிழகத்தில் 5 நாட்களுக்கு வெப்ப அலை வீசும்.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

தமிழகத்தில் பல மாவட்டங்களில் கோடை வெயில் மக்களை கடுமையாக வாட்டி வதைத்து வருகிறது. மேலும் இரவு நேரங்களில் வெப்ப அலை வீசுவதாலும் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -