நாடு முழுவதும் லோக்சபா தேர்தல் வருகிற மார்ச் அல்லது ஏப்ரல் மாதங்களில் நடைபெற இருப்பதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனால் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தேர்தல் பணிகளை விறுவிறுப்பாக மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் தமிழகத்தில் நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் சீமானின் கட்சி சின்னம் விவசாயி-ஆக தான் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
தரமான கூட்டணியில் SK 23 படம்., சிவகார்த்திகேயன் ஹீரோயின் இவர்தானாம்., ஏ. ஆர் முருகதாஸ் அப்டேட்!!
ஆனால் ஆந்திராவை சேர்ந்த பாரதிய பிரஜா ஐக்யதா எனும் கட்சிக்கு விவசாயி சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனால் நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் சீமான், வேட்பாளர்கள் உள்ளிட்ட பலரும் கடும் அதிருப்தி தெரிவித்து வருவதாக கூறியுள்ளனர்.